பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இல்லையாம்..! ஸ்டாலினுக்கு லக் அடிக்குமா..?

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. வாக்கு சதவிகிதம் அதிகரித்திருந்தாலும் தோல்விக்குக் காரணம் கூட்டணி வைக்க முடியாமல் போனதுதான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் இண்டியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மியும், சமாஜ்வாதியும் கேட்ட தொகுதிகளைக் கொடுப்பதற்கு காங்கிரஸ் முன்வரவில்லை. அதனாலே இந்த தோல்வி என்று தெரியவந்துள்ளது. ஆகவே, இனி மாநிலத் தேர்தல் மற்றும் மத்திய தேர்தலில் அனைத்து கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் […]
தமிழ் நாட்டுக்கு மட்டும் இரண்டு கவர்னர்களா..? உதயநிதியுடன் மல்லுக்கட்டும் தமிழிசை

தெலுங்கானா கவர்னராக இருக்கும் தமிழிசை செளந்தர்ராஜனுக்கு கடந்த ஆட்சியிலும், இப்போதைய காங்கிரஸ் ஆட்சியிலும் மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. அதனால் அவ்வப்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மேலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நின்று வெற்றி பெற்று அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். இந்த நிலையில்தான் தமிழிசை எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘உங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம்..’ என்று காட்டமாக பதில் அளித்தார். அதன்பிறகு இருவரும் மாறி மாறி புகார் செய்து […]
பா.ஜ.க.வின் பால் கனகராஜை தோற்கடிச்சுட்டாங்க… களம் இறங்கிய தி.மு.க.. மூத்த புள்ளிகள்

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (எம்.எச்.ஏ.ஏ.) தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி அடையவேண்டும் என்று போட்டியிட்ட பா.ஜ.க.வை சேர்ந்த பால்கனகராஜ் தோற்றுப்போயிருப்பது, கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய இந்த தேர்தல் கடந்த 2016ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படவில்லை. பல்வேறு வழக்குகளைத் தாண்டி தேர்தல் நடத்தும் அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீர் நியமிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. இந்த […]
மிக்ஜாம் புயல் பேரிடர்: ஒரு மாத ஊதியத்தை வழங்கிய தி.மு.க. மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, தி.மு.க. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காசோலையாக வழங்கினர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர், மிக்ஜாம் புயல் […]
கருணாநிதி சிலைக்கு அனுமதி இல்லையா..? மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்புக்கு ஆபத்து

கருணாநிதிக்கு தமிழகம் முழுக்க லட்சக்கணக்கான சிலைகளை நிறுவும் முயற்சியில் தி.மு.க. பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவருகிறது. அதுவும் முக்கியமாக ஒவ்வொரு ஊரின் முக்கிய பகுதிகளிலும் சிலை வைப்பதில் தீவிரம் காட்டுகிறது. இந்த வகையில் கருணாநிதியின் சினிமா பங்களிப்பை காட்டும் வகையில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நுழைவாயிலில் கருணாநிதி சிலை அமைக்கும் முயற்சி தொடங்கியது. தனியாரின் இடத்தில் கருணாநிதி சிலையை நிறுவக்கூடாது என்று அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கின. எதிர்ப்பு வலுப்பதைக் கண்டதும், அந்த இடத்தில் கருணாநிதி சிலையை […]
ஓடி ஒளியும் போதைப்பொருள் குற்றவாளிகள்… அதிரடி வேட்டையில் 148 பேர் கைது…

தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் காவல்துறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுஜ் பிரிவு அதிகாரிகள் மாநிலம் முழுக்க அதிரடி வேட்டை நடத்திவருகிறார்கள். அதன்படி நவம்பர் 29 தேதி முதல் டிசம்பர் 23 வரையிலும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 148 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, 886 கஞ்சா, 1 கிலோ மெத்தகுலோன், 100 டைடோல் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தர்மேந்திரன், […]
காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி யாத்திரை! கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

வாரணாசியில் நடைபெற உள்ள காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வாரணாசி செல்லும் பயணிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வழியனுப்பு, ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார். காசி தமிழ் சங்கமத்தை மத்திய அரசு முதன்முறையாக கடந்த ஆண்டு நடத்தியது. அதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இசைஞானியின் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. […]
பா.ஜ.க.வுடன் தி.மு.க.வுக்கு கள்ளத்தொடர்பு..? போட்டு உடைக்கும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் இத்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை பொழிந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொது மக்களின் பொருட்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது […]
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சந்திரசேகரராவ்!

இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ்.கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகரராவ் தோல்வியடைந்தார். அதன்படி காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார். இதற்கிடையில் தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கே.சந்திரசேகரராவ் தனது பண்ணை வீட்டில் குளியல் அறைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக கீழே […]
2024 தேர்தலுக்கு கிருஷ்ண ஜென்ம பூமி..! ஸ்பீடு எடுக்கும் பா.ஜ.க.

மத்திய பா.ஜ.க. ஆட்சியில் அமர்வதற்கு ராம ஜென்ம பூமி விவகாரம் கை கொடுத்ததை யாரும் மறந்துவிட முடியாது. அயோத்தியில் மசூதியை இடித்துவிட்டு, அங்கு ராமருக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்பது பாஜகவின் கனவாக இருந்தது. அதையே தேர்தல் வாக்குறுதியாக கூறி ஆட்சியை பிடித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்போது 2024 தேர்தலை கணக்கிட்டு கிருஷ்ணர் பிறந்த மதுராவை பா.ஜ.க. குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. […]

