சிறுமியை பாலியல் வன்கொடுமையில் இருந்து காப்பாற்றிய குரங்குகள்! எங்கே தெரியுமா?

பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்த நிறுத்த எல்லா இடங்களுக்கும் சினிமா கதாநாயகர்கள் வந்துவிட முடியுமா? தற்காப்புக் கலையும், தனி மனித ஒழுக்கமும், பெற்றோர்களின் சரியான வளர்ப்புமே இதுபோன்ற குற்றச்சம்பவங்களை நடக்காமல் தடுக்க முடியும். உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் தவுலா என்ற கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு வெளியே விளையாடிக் […]
ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர்! நடந்தது என்ன?

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா, சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டருகே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 27 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம், போலீசார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற […]
காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் ஏன்? போலீஸ் விளக்கம்!

போஸ்வெங்கட் இயக்கத்துல விமல், சாயாதேவி நடிப்புல ரெடியாகியிருக்கிற படம் தான் சார். 1980ஸ் கால கட்டத்த மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்கிற இந்த படத்துல 2வது முறையா விமல் ஆசிரியர் கதாபாத்திரத்துல நடிக்கிறாரு. காதல், காமெடி, சென்டிமெண்ட், சண்டைக்காட்சிகள்னு மொத்த பேக்கேஜா ரெடியாகி இருந்த படத்துக்கு மியூசிக் சித்துகுமார். சார் படத்தோட ஆடியோ லாஞ்ச் ரொம்ப சிறப்பா நடந்துச்சு. இதுல விஜய்சேதுபதி, வெற்றிமாறன், சரவணன்னு பலர் கலந்துக்கிட்டாங்க. அப்ப பேசிய விஜய்சேதுபதி, சரவணனை பாத்து அழகா இருந்தீங்கன்னு […]
புதுச்சேரி சிறுமி கொலை: சிறையில் தற்கொலை செய்து கொண்ட குற்றவாளி!

புதுச்சேரியில் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் சிறுமியின் வீட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 57 வயதான விவேகானந்தன் மற்றும் 19 வயதான கருணாஸ் என்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒன்றரை நாட்கள் கழித்து […]
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் என்ன சம்பந்தம்?

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 3வது மாடியில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவ மாணவி சடலமாக மீட்கப்பட்டார். 31 வயதான அவரின் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தநிலையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இன்றும் அடங்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்ற நபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த […]
அரசு ஊழியரை சஸ்பெண்ட் செய்த உதயநிதிக்கு என்ன தண்டனை..? கொதிக்கும் அதிகாரிகள்

அரசு ஊழியர் மாற்றி மாற்றிப் பேசியதற்கு அமைச்சர் உதயநிதி சஸ்பெண்ட் உத்தரவு கொடுத்திருக்கிறார். அரசு ஊழியர் செய்தால் தண்டனை, அரசியல்வாதிகளுக்குத் தண்டனை இல்லையா என்று அரசு ஊழியர்கள் கொதித்து வருகிறார்கள். சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் புதர் மண்டி கிடப்பதாக வந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்தீர்களா என்று அந்த பகுதி பிடிஓ சோமதாஸிடம் கேட்டார். அதற்கு சோமதாஸ், நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்று பதில் சொன்னார். இது குறித்து சம்பந்தப்பட்ட […]
மகளின் பாதுகாப்புக்காக தந்தை செய்த விஷயம்!

பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வரும் நிலையில், அவர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்பது அரசாங்கம் மட்டுமே சிந்திக்க வேண்டும் என்பது இல்லை. அதற்கு ஏற்ப வகையில் பாகிஸ்தானில் ஒரு அபூர்வ சம்பவம் நடந்துள்ளது. மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் நவீன தொழில்நுட்பத்தின் வெளிப்பாடான சி.சி.டி.வி. கேமராக்கள் குற்றங்களை தடுக்கவும், நடந்து முடிந்த குற்றங்களுக்கு சாட்சியாகவும் அமைந்துவிடுகிறது. கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றங்களில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்க சி.சி.டி.வி.யின் பங்கு […]
திட்டமிட்டு ஊதப்பட்டதா மகாவிஷ்ணு சர்ச்சை..? அன்பில் மகேஸ் டிரைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு..?

’’எங்க ஏரியாவுக்குள்ள வந்து பேசுவதற்கு உனக்கு என்ன துணிச்சல், சும்மா விட மாட்டேன்’’ என்று மகாவிஷ்ணுவின் சர்ச்சைப் பேச்சுக்கு எதிராக அமைச்சர் அன்பில் மகேஸ் கொந்தளித்தார். இதையடுத்து மகாவிஷ்ணுக்கு எதிராக தி.மு.க.வினர் தொடர்ந்து கடுமையாக எதிர்வினை ஆற்றினார்கள். அன்பில் மகேஸ் ரிசைன் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து தமிழகம் முழுவதும் மகாவிஷ்ணு விவகாரம் மிகப்பெரிய பேசப்பட்டு பரபரப்பானது. இத்தனை பெரிதாக அந்த விவகாரம் பேசப்பட்டதற்கும் தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததற்குப் பின்னணியில் […]
விமான நிலையத்தில் மஹாவிஷ்ணு கைது..? வாய்க்கொழுப்புக்கு தயாராகும் வழக்குகள்

அரசு பள்ளியில் மாற்றுத் திறனாளி ஆசிரியருடன் மல்லுக்கட்டிய மஹாவிஷ்ணு கைது அச்சத்தில் ஆஸ்திரேலியாவுக்குப் பறந்துபோனார். இந்த நிலையில் அவருக்கு பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவித்திருப்பதை அடுத்து, கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை கிண்டல் செய்வது போல் பேசியிருக்கிறார். எனவே, அவரை விமான நிலையத்தில் கால் வைத்தவுடன் கைது செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அரசு பள்ளியில் நடந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் மகாவிஷ்ணு, பள்ளி கல்வித்துறை அமைச்சர ‘அவர் அளவுக்கு எனக்கு அறிவிருக்கா என்னன்னு தெரியல’ன்னு கிண்டல் […]
விஷ ஊசி போட்டு பயிற்சி மருத்துவர் தற்கொலை… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் கடுமையான பணிச்சூழலை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்வது தொடர்கதை ஆகிறது. இதனை தடுப்பதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்காத நிலையில், இன்னொரு மாணவர் தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து மருத்துவ அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் பெருமாள் பிள்ளை, ‘’விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த டாக்டர் அரவிந்த் (29) சென்னை மருத்துவக் கல்லூரியில் MD முதுகலை பொது மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். திருவல்லிக்கேணி ஓமந்தூரார் […]

