பெண் டி.எஸ்.பி.யின் தலைமுடி பிடித்தவரின் கை உடைந்தது..! இது மட்டும் போதுமா..?

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரியை ஒருவர் தலை முடியை இழுத்து தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த […]
செந்தில் பாலாஜி விடுதலைக்கு நோ சான்ஸ்… என்ன காரணம்னு கேளுங்க.

செந்தில் பாலாஜியை எப்படியாவது சிறையில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்று கடுமையாக தி.மு.க. போராடி வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்கிறார் வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவரது பதிவில், ‘’தி.மு.க. வழக்கறிஞர் அணியின் தவறான செயல்பாடுகளால் இப்பொழுது செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது கடினம் போல தோன்றுகிறது. முறையான கைதி என்ற நிலையி்ல் ஆட்கொணர்வு மனு அல்லது ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus) தவறாக தாக்கல் செய்த போதே சிக்கல் ஆரம்பித்து விட்டது. […]
நீங்கள் கேட்கும் கேள்வியே தவறு! சஞ்சய் ராய் சொல்வது என்ன?

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் தற்போது நிரபராதி என்று நிரூபிக்கும் வகையில் அவரது வழக்கறிஞர் சில விவரங்களை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்காள மாநிலம் அரசு மருத்துவமனையில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் செமினார் அறையில் அரை நிர்வாணமாக உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது […]
திருச்சி என்.ஐ.டி.யில் நடந்த கண்றாவி இது தான்..? திகிலூட்டும் சம்பவங்கள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருச்சி என்.ஐ.டி.யில் என்ன நடந்தது என்று தெரியாமலே பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேச்சுவார்த்தை மூலம் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும் இன்னமும் நம் சமூகம் திருந்தவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில் அங்கு நடந்த சம்பவம் குறித்து புகாரளித்த மாணவியின் வாக்குமூலமாக ஒரு பதிவு வெளியாகி பரபரப்பாகிவருகிறது. அந்த அதிர்ச்சி பதிவில், ‘’உங்களில் பெரும்பாலானோருக்கு சரியான காட்சி தெரியாததால் இன்றைய சம்பவத்தை சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். […]
’சண்டாளன்’ பேச்சுக்கு சீமானுக்கு திடீர் சிக்கல். கார் ரேஸ் திசை திருப்பும் முயற்சி?

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் நடத்தும் உதயநிதி மீது தொடர்ந்து பலரும் விமர்சனம் செய்துவரும் நிலையில், இன்று சீமான் மீது எஸ்.டி., எஸ்.சி. ஆணையத்தின் வழி காட்டுதல் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாம் தமிழர் தம்பிகள் அத்தனை பேரும் கொதித்துப் போயிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து இயக்குனர் களஞ்சியம், ‘’சண்டாளன் என்ற சொல் தமிழ் மற்றும் ஆங்கில அகராதியில், கொடும் பாதகன், துஷ்டன், கொடியவன், மாபாவி, வல்லெதிரி, போக்கிரி பாதகன், எதிராளி என்று பொருள்படும். எனவே, […]
விஜய் கட்சிக்குப் புதிய அரசியல் ஆலோசகர்..? திருமா அட்வைஸ்க்கு மரியாதை

புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு திருமாவளவன் கொடுத்திருக்கும் ஆலோசனையை அடுத்து, தன்னுடைய அரசியல் ஆலோசகரை மாற்ற இருப்பதாகவும் சில சீனியர்களை கட்சிக்கு நியமிக்கும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஜய் அரசியல் பற்றி பேசிய திருமாவளவன், ‘’எம்ஜிஆர் சினிமாவில் இருந்த காலத்திலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால், அவர் அரசியலில் இருந்து அதாவது ஒரு ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரால் தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட போது நீண்ட நெடிய அனுபவம் உள்ள பல தலைவர்கள் அவரோடு வெளியேறினார்கள். […]
சீமான், சாட்டை துரைமுருகனுக்கு வருண்குமார் சம்மன்..? திரள்நிதிக்கும் வரதட்சனைக்கும் சண்டை.

காக்கிச் சட்டைக்கு என ஒரு கண்ணியம் இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவருக்கு என ஒரு மதிப்பு இருக்கிறது. இந்த எல்லைகளைத் தாண்டி இரண்டு பேரும் லோக்கல் ரவுடிகள் போன்று கட்டி உருள்வது வேடிக்கையாக மாறியிருக்கிறது. வருண்குமார் எஸ்.பி. சமூகவலைதளத்தில் இருந்து வெளியேறப் போகிறேன் என்று பிரச்னையை முடித்துவைத்தார். அதன் பிறகும் சீமான் அவரை வம்பிழுக்கும் வகையில், ‘’காக்கிச் சட்டையைப் போட்டுக்கொண்டு மோதக்கூடாது. சட்டையைக் கழட்டிவிட்டு வா’’ என்று பேசினார். இதற்கு வருண்குமார், ’’பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக […]
எடப்பாடி பழனிசாமி கொலைக் குற்றவாளி..? வம்புக்கு இழுக்கும் அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமி கொலைக் குற்றவாளி..? வம்புக்கு இழுக்கும் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்குமான மோதல் எக்குத்தப்பாக மாறிவருகிறது. எடப்பாடி பழனிசாமியை ஒரு கொலைக் குற்றவாளி என்று பொதுக்கூட்டத்தில் பேசி பெரும் பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிறார் அண்ணாமலை. சென்னை பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘’ இன்று திமுக பழனியை நோக்கிப் படையெடுக்கிறது. பழனி முருகன் அசாதாரணமான கடவுள். ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகப் பெருமான், அரசியலுக்காகப் பயன்படுத்தினால், மண்ணோடு மண்ணாக ஆக்கிவிடுவார். சனாதன தர்மத்தை அழிப்போம் என்று […]
அரசு பள்ளியில் பதற்றம்! அரியலூரில் நடந்தது என்ன?

அரியலூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஆய்வகத்தில் கணினிகள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் மாணவ, மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் தேளூர் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தில் இருந்து பல மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் செயல்பட்டு வரும் கணினி ஆய்வகத்தில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. இதைத்தொடர்ந்து பக்கத்து அறைகளுக்கும் கரும்புகை பரவியது. இதனால் 19 மாணவ, […]
மாணவி பாலியல் வழக்கில் கைதான சிவராமன்! திடீர் தற்கொலை முயற்சி!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்திய 35 வயதான சிவராமன், முகாமில் தங்கி பயிற்சி பெற்ற 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். அதே போல் மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிவராமனை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர். அப்போது ரகசிய […]

