News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சவுக்கு சங்கர் மீண்டும் ஜெயிலுக்குப் போகிறாரா..? அவரே கொடுக்கும் அப்டேட்

சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும் சவுக்கு சங்கர் தி.மு.க. அரசுக்கு பெரும் குடைச்சலக் கொடுப்பார், நிறைய ஊழல் ஆதாரங்கள் வெளியிட்டு பரபரப்புக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னை மீண்டும் வழக்கில் சிக்கவைத்து சிறைக்குப் போகிறார்கள் என்று அவரே பதிவு போட்டிருக்கிறார். சவுக்கு சங்கரிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் மூலம் ஏராளமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் 400க்கும் மேற்பட்ட பெண்களுடன் சவுக்கு சங்கருக்குத் தொடர்பு இருக்கிறது என்று திருச்சி சிவா ஒரு பேட்டியில் கூறினார். இந்த விஷயத்தில் தேவையில்லாமல் சவுக்கு […]

சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்தா..? நெஞ்சு வலி பின்னணி

சிறையில் இருந்து வெளியே வந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக குறிப்பாக உதயநிதிக்கு எதிராக மீண்டும் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார். இந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சவுக்கு சங்கர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. பெண் போலீசார் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். […]

கூல் லிப் விற்பனை செய்வர்கள் மீது குண்டாஸ்! பரபரப்பு தகவல்கள்!

கூல் லிப், விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரபரப்பு கேள்வியை எழுப்பியுள்ளார்.   பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக நாள்தோறும் செய்திகள் வெளிவருகிறது. இதற்கு முன்னதாக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்தி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை ஒழிப்பு […]

தாயின் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட மகன்! என்ன தண்டனை தெரியுமா?

பெற்ற தாயை கொலை செய்த மகன் அவரின் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூரம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த கொடூரனுக்கு ரொம்பவும் ஸ்பெஷலான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அது என்னவென்று விரிவாக பார்க்கலாம்.   கடந்த 2017ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் குச்சொரவி என்ற இளைஞர் தனது 63 வயது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தாயை கொடூரமாக கொலை செய்த குச்சொரவி, அவரின் உடலின் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளார். இதயம் மற்றும் விலா எலும்புகளை எண்ணெயில் வறுத்து […]

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை! நடந்தது என்ன?

திருமணம் என்ற பந்தத்தில் ஆண், பெண் இணைவது வாடிக்கையானது. ஆனால் சில சமயங்களில் ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதற்கு ஒரு தரப்பில் எதிர்ப்பும், மற்றொரு தரப்பில் ஆதரவும் இருக்கத்தான் செய்கிறது. பல்வேறு நாடுகளில் இதற்கு தடையும் கிடையாது.   ஆனாலும் வித்தியாசமாக இன்னொரு திருமண பந்தம் இருக்கிறதென்றால் அதுதான் சோலாகாமி என்ற முறை. அதாவது தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் முறை. வெளிநாடுகளில் மணமகள், மணமகன் இன்றி தன்னைத்தானே திருணம் செய்து […]

லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்!

லட்டு பிரசாதம் தொடர்பான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதம் வந்த நிலையில் அதனை செப்டம்பர் மாதம் வெளியிட்டது எதற்காக என்று சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.   திருப்பதி லட்டு விவகாரம் சர்வதேச பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்துள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். […]

நரபலி கொடுக்கப்பட்ட 2ம் வகுப்பு மாணவன்! என்ன நடந்தது?

தங்களுடைய பள்ளி நம்பர் ஒன் பள்ளியாக வேண்டும் என்று ஆசைப்பட்ட பள்ளி நிர்வாகம், 2ம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்த கொடூர சம்பவம் உத்தரபிரதேச மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.     உத்தரபிரதேச மாநிலத்தில் டி.எல். பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதன் பிரின்சிபல் மற்றும் நிர்வாகிகள் தங்களின் பள்ளி நம்பர் ஒன் பள்ளியாக மாறி பிசினஸ் வளர்ச்சி அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டு பிளாக் மேஜிக் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளில் தீவிரமாக இறங்கினர்.   […]

கேரள ஏ.டி.எம். கொள்ளையர்கள்! தமிழகத்தில் சிக்கியது எப்படி?

கேரள மாநிலத்தில் பலே கொள்ளையர்கள் 3 ஏ.டி.எம்.களில் இருந்து கொள்ளையடித்து வந்த பணத்துடன் நாமக்கல் போலீசில் சிக்கிய சம்பவம் குறித்த அதிர்ச்சி பின்னணி உங்களுக்காக.   கேரள மாநிலம் திரிச்சூரில் நேற்று (செப்.28) நள்ளிரவில் 3 ஏ.டி.எம்.களில் லட்சக்கணக்கான பணத்தை வடமாநிலத்தைச் சேர்ந்த பலே கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். அந்த பணத்துடன் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பித்து செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   இதைத்தொடர்ந்து ரோந்துப்பணிகளை போலீசார் அதிகரித்த நிலையில், […]

அ.தி.மு.க.வில் சேர்கிறார் சவுக்கு சங்கர்..? முதல் வீடியோவில் கை உடைப்பு சம்பவம்..?

தி.மு.க. அரசுக்கு எதிராக முன்பை விட வீரியமாக செயல்படுவேன் என்று சவுக்கு சங்கர் கூறியிருக்கும் நிலையில் அவரை தங்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்றுமாறு இரண்டு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் அல்லது உதயநிதிக்கு எதிராகத் தேர்தலில் நிறுத்துவதற்கும் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. சிறையில் இருந்து விடுதலையான சவுக்கு சங்கரை அ.தி.மு.க. ஆதரவாளர்களும் பா.ஜ.க. ஆதரவாளர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவர்கள் மூலமாக அ.தி.மு.க. மேலிடத்தில் இருந்து நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘’தொடர்ந்து […]

லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா..?  மேயர் பிரியா பொறாமை லீலைகள்

சென்னைக்கு அழகான பெண் மேயர் பிரியா கிடைத்திருக்கிறார், மழை வெள்ளத்தில் மக்களுடன் நிற்கிறார் என்றெல்லாம் மக்கள் பெருமைப்பட்டு வரும் நேரத்தில், தன்னை விட கலக்கலாக லிப்ஸ்டிக் போட்டிருந்த காரணத்திற்காக சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதரான மாதவி பணியிட மாற்றம் செய்திருப்பதாக வந்திருக்கும் செய்தி கலங்கடிக்கிறது. கடந்த மாதம் மேயர் பிரியாவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தபேதார் மாதவி போட்டிருந்த லிப்ஸ்டிக் மேயர் பிரியாவை விட அழகாகவும் கலர் தூக்கலாகவும்  இருந்ததாம். எனவே, பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். […]