ரஜினிகாந்த் ரசிகர்கள்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்!

நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது ரசிகர்கள் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். குமரிக்கடலில் உருவான காற்று கீழடுககு சுழற்சி காரணமாக குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பலரது வீடுகள் மழைவெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியினர் ஹெலிகாப்டர் வாயிலாக […]
விஷால் போராளி… மாரி செல்வராஜ் வில்லங்கமா.? நெல்லை சர்ச்சை

தென் மாவட்ட வெள்ளத்தை சமாளிப்பதற்கு தங்கை கனிமொழியையும், மகன் உதயநிதியையும் அனுப்பிவிட்டு, இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்கு முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுவிட்டார். களத்தில் உதயநிதியுடன் இணைந்து இயக்குனர் மாரி செல்வராஜ் மீட்புப் பணியில் செயல்பட்டது கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் குடும்பம் சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கியதால், அமைச்சர் உதயநிதியும் அவரது படத்தின் ஹீரோவுமான உதயநிதியிடம் உதவி கேட்டிருக்கிறார். அன்றைய இரவே உதயநிதி அந்த கிராமத்துக்குச் செல்ல முயன்றும் முடியாமல் போயிருக்கிறது. அடுத்த […]
ரஜினிகாந்தை சந்தித்த டிமான்டி காலனி 2 தயாரிப்பாளர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, டிமான்டி காலனி 2 திரைப்பட தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நடிகர் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டிகாலனி பெரியளவில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி அப்படக்குழுவினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதால் அதைத்தொடர்ந்து டிமான்டி காலனி2 திரைப்படம் தயாராகும் என்ற அறிவிப்பு வெளியானது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிமான்டிகாலனி 2 திரைப்படத்தில் அருள்நிதி, நடிகை பிரியாபவானி சங்கர் […]
கருணாநிதி சிலைக்கு அனுமதி இல்லையா..? மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்புக்கு ஆபத்து

கருணாநிதிக்கு தமிழகம் முழுக்க லட்சக்கணக்கான சிலைகளை நிறுவும் முயற்சியில் தி.மு.க. பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவருகிறது. அதுவும் முக்கியமாக ஒவ்வொரு ஊரின் முக்கிய பகுதிகளிலும் சிலை வைப்பதில் தீவிரம் காட்டுகிறது. இந்த வகையில் கருணாநிதியின் சினிமா பங்களிப்பை காட்டும் வகையில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நுழைவாயிலில் கருணாநிதி சிலை அமைக்கும் முயற்சி தொடங்கியது. தனியாரின் இடத்தில் கருணாநிதி சிலையை நிறுவக்கூடாது என்று அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கின. எதிர்ப்பு வலுப்பதைக் கண்டதும், அந்த இடத்தில் கருணாநிதி சிலையை […]
திருப்பதிக்கு பாத யாத்திரையாக சென்ற நடிகை தீபிகா படுகோன்! பக்தர்களுடன் செல்பி!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் திருப்பதி மலையேறி 2.30 மணி நேரம் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார். பிரபல இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘பைட்டர்’ திரைப்படம் வருகிற (2024) ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் ஹிருத்திக்ரோஷன் மற்றும் நடிகை தீபிகா படுகோட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீப காலமாகவே திரைப்பட வெளியீட்டிற்கு முன்பாக திரைப்படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் பைட்டர் திரைப்படம் […]
21வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடக்கம்!

இந்தோசினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பின் 21வது சர்வதேச திரைப்பட விழா சென்னை ராயப்பேட்டையில் நேற்று (டிச.14) தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் 21வது சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கப்பட்டது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு, தமிழக அரசின் ஆதரவுடன் நடத்தப்படும் இத்திரைப்பட விழாவில் மொத்தம் 57 நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமையில் நடிகை பார்வதி நாயர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்தோசினி […]
போஸ் கொடுக்க வரவில்லை! மக்களை பார்த்து கண் கலங்கிய டி.ராஜேந்தர்!

அகில இந்திய சிலம்பரசன் டி.ஆர். ரசிகர் மன்றம் சார்பாக மிக்ஜாம் புயல் மழை தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் வழங்கினார். வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும்4 ஆகிய தேதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து பல்வேறு சேதங்கள் ஏற்படுத்தியது. மழைநீரில் வீட்டு […]
விஜய் மக்கள் இயக்கம்! சென்னையில் 25 மருத்துவ முகாம்கள்!

சென்னையில் 25 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செயல்பட்டு வரும் மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் முதல் படியாக கடந்த பொதுத்தேர்வில் அதிகளவில் மதிப்பெண் வாங்கிய மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக தேர்வு செய்து அவர்களுக்கு விழா எடுத்து உதவித்தொகை வழங்கினார். அதைத்தொடர்ந்து கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் […]
இளையராஜா பிரிவு பற்றி வைரமுத்து என்ன சொல்கிறார் தெரியுமா..?

சினிமா இசை ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு பிரிவு என்றால், அது இளையாராவும் வைரமுத்துவும் உறவை முறித்துக்கொண்ட நிகழ்வுதான். இதுகுறித்து இரண்டு பேரும் அதிகம் வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஆனால், ஏ.ஆர்.ரகுமானுடன் பணியாற்ற நேரந்த அனுபவம் குறித்து பேச நேர்கையில் இளையராஜா குறித்தும் பேசியிருக்கிறார் வைரமுத்து. அவர் என்ன பேசியிருக்கிறார் என்று கேளுங்கள். இளையாராஜாவுடன் பணியாற்றிய முதல் ஆறாண்டு காலத்தை என்னால் மறக்கமுடியவில்லை. நெஞ்செல்லாம் நுரைகட்டிக் கிடந்த காலமது. வெற்றிபெற வேண்டுமென்ற வேட்கை உடம்பையும் மனதையும் உலுக்கிய காலமது. […]
சிக்ஸர் சிங்கிற்கு ஜே போடுங்க…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளில் இன்னொரு பிரபலமும் பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவர்தான், ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து அசத்திய யுவராஜ் சிங். 2007ம் ஆண்டு செப்டம்பர் 19. இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்குமான டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்தியா 16வது ஓவரில் தடுமாறிக் கொண்டிருந்தது. நம்பிக்கை நாயகன் தோனியும் அன்று அவ்வளவு சிறப்பாய் ஆடவில்லை. அந்த இக்கட்டான நேரத்தில்தான், யுவராஜ் சிங் களத்தில் இறங்கினார். அன்று யுவராஜ் […]

