News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

துபாயில் இருந்து திரும்பிய சரத்குமார்! கேப்டன் சமாதியில் அஞ்சலி!

துபாயில் இருந்து திரும்பிய நடிகர் சரத்குமார், கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கேப்டனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சென்னை தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர்  நேரில் சென்று […]

ரஜினிக்கு மனசாட்சியே இல்லையா…? தூத்துக்குடி வெள்ளத்தில் பாதித்த மக்களை பார்க்க மனசு வரலையே.. டென்ஷனாகும் ரஜினி ரசிகர்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த நேரத்தில் இதற்கென நேரில் வந்து, ‘கூட்டத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவியது எனக்குத் தெரியும்’ என்று தேவையே இல்லாமல் கருத்து சொல்லி சலசலப்பு ஏற்படுத்தினார். பின்னர் அவரே விசாரணை ஆணையத்தில் பல்டி அடித்தது வேறு விவகாரம். இந்த நிலையில், வேட்டையன் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி கன்னியாகுமரி ஏரியாவில் தான் டேரா போட்டிருக்கிறார் ரஜினிகாந்த். தூத்துக்குடி விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்தவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்த்துக்கொண்டுதான் காரில் […]

என்ன மனுஷன்யா விஜயகாந்த்… 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்னு அஞ்சலி செலுத்துறாங்க…

அப்துல் கலாம் மறைவுக்கு தமிழகம் முழுக்க பெரும் அனுதாபக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் உண்மையிலே நெஞ்சம் முழுக்க பாசத்துடனும் நேசத்துடனும் எக்கச்சக்க அபிமானிகள் வந்து குவியும் அளவுக்கு நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறார் விஜயகாந்த். அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை தீவுத் திடலில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அஞ்சலிக்காக் வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் அங்கிருந்து பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை […]

என்ன மனுஷன்யா விஜயகாந்த்… 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்னு அஞ்சலி செலுத்துறாங்க…

அப்துல் கலாம் மறைவுக்கு தமிழகம் முழுக்க பெரும் அனுதாபக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் உண்மையிலே நெஞ்சம் முழுக்க பாசத்துடனும் நேசத்துடனும் எக்கச்சக்க அபிமானிகள் வந்து குவியும் அளவுக்கு நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறார் விஜயகாந்த். அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை தீவுத் திடலில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அஞ்சலிக்காக் வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் அங்கிருந்து பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை […]

இரும்பு மனுஷி ஜெயலலிதாவை அலறவிட்ட ஒரே தலைவன் விஜயகாந்த்

அண்ணா தி.மு.க.வை இரும்புக் கோட்டையாக வைத்திருந்த தலைவி ஜெயலலிதாவிடம் பேசுவதற்கு அந்த கட்சியின் தலைவர்கள் மட்டுமின்றி, கூட்டணித் தலைவர்களும், அதிகாரிகளும் ரொம்பவே அச்சப்படுவார்கள். அவர் பேசுவதை மட்டுமே பிறர் கேட்க வேண்டும் என்று நினைப்பார். போயஸ் தோட்டத்தில் அமர்ந்துகொண்டு இங்கிலாந்து ராணி போன்று கட்சியையும் ஆட்சியையும் நடத்தியவர் ஜெயலலிதா. சட்டசபையில் அவருக்கு எதிரே நின்று பேசுவதற்கு விருப்பமில்லாமல் கருணாநிதி கூட அவைக்குப் போகாமல், கையெழுத்துப் போட்டுவிட்டு கிளம்பிவிடுவார். அப்படிப்பட்ட காலத்தில்தான், சட்டசபையில் மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்து […]

மக்கள் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் மினி வரலாறு

அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என்று இரண்டு மாபெரும் ஆளுமைகள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு இருந்த நேரத்தில், தனிக்காட்டு ராஜாவாக நுழைந்து எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த். ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்ட மதுரை மண்ணின் மைந்தன், விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த விஜயகாந்த், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.   சிறு வயது முதல் சினிமா ரசிகர். எந்த ஒரு சினிமாவை […]

ரெண்டு சீட்டுக்காக எங்க கேப்டனை கொன்னுட்டாங்களே… கதறியழும் விஜயகாந்த் ரசிகர்கள்

நடிகர் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக  டிசம்பர் 28 காலை உயிர் இழந்ததாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், கண்ணீரும் கம்பலையுமாக கடைசி முறையாக அவரது முகத்தைப் பார்ப்பதற்கு தே.மு.தி.க. தலைமையகத்தில்  வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் கண்ணீருடன் பேசியபோது, ‘’மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவரை முடிந்த வரையிலும் தனிமை படுத்த வேண்டும் என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால், மருத்துவமனையில் இருந்து வந்த அடுத்த நாளே பொதுக்குழு என்று அத்தனை பேர் மத்தியில் எங்கள் புரட்சிக் கலைஞரை காட்சிப் […]

கலைஞர் நூற்றாண்டு விழா: புதிய மாற்றம் அறிவிப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ள இடம் மாற்றப்பட்டுள்ளதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் திரைத்துறையினர் சார்பில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவிற்கான அழைப்புகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டது. அதன்படி முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் 100 விழா டிசம்பர் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக இதன் தேதி […]

தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த்! முக்கிய தகவல்கள்!

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி மாவட்டத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தூத்துக்குடிக்கு சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், வேட்டையன் படப்பிடிப்புக்காக வந்தது தெரியவந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகும் வேட்டையன் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார்.  இத்திரைப்படத்திற்கான முதல்கட்ட படபிடிப்பு  கன்னியாகுமரியில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கேரளா, மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று தூத்துக்குடி […]

சிறந்த ஜூரி வெற்றிமாறன்: சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்ட வடிவேலு!

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான நேற்று (டிச.21) நடைபெற்றது. இதில் சிறந்த நடிகராக நடிகர் வடிவேலுவும், சிறந்த ஜூரியாக இயக்குனர் வெற்றிமாறனும் அறிவிக்கப்பட்டனர். 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 57 நாடுகளைச் சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட்டன. இதில் தமிழ் பிரிவில் வசந்த் பாலனின் அநீதி திரைப்படம், மந்திரமூர்த்தியின் அயோத்தி திரைப்படம், தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர் […]