விஜய்க்குப் போட்டியாக தனுஷை களமிறக்கும் தி.மு.க..? ஓடிவந்து புரமோட் செய்யும் உதயநிதி

தி.மு.க. நடத்திய கலைஞர் 100 அட்டர் பிளாப் ஆனதற்கு நடிகர் விஜய் சென்னையில் இருந்துகொண்டே வராமல் போனதுதான் காரணம் என்று தி.மு.க. ரொம்பவே காட்டமாக இருக்கிறது. 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முழு அளவில் இல்லையென்றாலும் விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றே தெரிகிறது. தொடர்ந்து விஜய்க்கு மக்களிடம் கிடைத்துவரும் ஆதரவை எப்படியும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற திசையில் தி.மு.க. காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறது. அதனால் தற்போது நடிகர் தனுஷிற்கு ஆதரவு கொடுத்து […]
கைது ஆகிறாரா நயன்தாரா..? வில்லங்கமாகும் அன்னபூரணி அசைவம் விவகாரம்

நயன்தாராவின் 75வது திரைப்படமான அண்ணபூரணி திரைப்படம் பரபரப்பாக வெளியானது. திரையரங்குகளில் வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 29ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஐயங்கார் வீட்டு பெண்ணான நயன்தாரா அசைவம் சமைக்க விரும்பும் சமைக்க கலைஞராக இருப்பார். அவருக்கு உறுதுணையாக இருக்கும் ஃபர்ஹான் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடித்திருப்பார். அவர் நயன்தாராவை அசைவம் சாப்பிட வைப்பதற்காக, ராமர் கூட அசைவம் சாப்பிட்டிருக்கிறார் என்று கூறுவார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிதாக எந்த எதிர்ப்பும் […]
அப்பாவை பிடிக்கும் என்ற 4 வயசு பிள்ளையை கழுத்தை நெரித்துக்கொன்ற ’பாசக்கார’ அம்மா

தாய்ப்பாசத்துக்கு நிகராக இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், பெற்ற தாயே பிள்ளைகளை கொல்லும் அவலமும் நடக்கத்தான் செய்கிறது. நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு பெண் செய்திருக்கும் பகீர் கொலையால் இந்தியாவே அதிர்ந்து நிற்கிறது. பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத், சுசனாவுக்கும் வெங்கட்டுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த […]
தேனியில் டிடிவி.தினகரன் போட்டி..! பன்னீருக்கு அடுத்த ஆப்பு… கொதிக்கும் மன்சூர் அலிகான்

எடப்பாடியால் கழட்டிவிடப்பட்ட டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதாக மேடைக்கு மேடை கூறப்பட்டு வந்தது. அதோடு இவர்கள் இருவரையும் பா.ஜ.க. கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் என்றும் நம்பிவந்தனர். இன்னமும் இந்த கூட்டணி உறுதியாவதற்கு முன்னரே உடைந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் நிற்பதற்கு ஆசைப்படுவதுதான். தற்போது இந்த தொகுதியின் எம்.பி.யாக பன்னீரின் மகன் ரவீந்திரநாத் இருந்துவருகிறார். வரும் தேர்தலிலும் பா.ஜ.க. துணையுடன் எப்படியும் மகனை ஜெயிக்க வைத்துவிடுவது என்ற ஆசையில் […]
அடுத்து மசூதிக்குள் நுழைகிறாரா அண்ணாமலை..? சூடு பிடிக்கும் நெற்றியில் திருநீறுடன் மாதா சிலைக்கு மாலை விவகாரம்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் பி.பள்ளிப்பட்டு பகுதியில் தேவாலய சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவிக்க முன்வந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாதாவுக்கு அண்ணாமலை மாலை போடுவதை தடுத்த கிருஸ்துவ இளைஞர்களுக்கும் சர்ச் வாசலிலே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையை உள்ளே செல்லக்கூடாது என்று எகிறிய இளைஞர்களிடம், ‘அடுத்து நான் பத்தாயிரம் பேரோடு வந்து மாலை போட்டால் என்ன செய்வீர்கள்’ என்று கேட்டு மிரட்டியதும் போலீஸ் வந்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை அப்புறப்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆதரவாளர்களுடன் […]
சாலி கிராமத்தில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய திரையுலகம்!

கேப்டன் மறைவைத் தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலகத்தில் கலந்து கொள்ள முடியாத திரைப்பிரபலங்கள் தற்போது சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த (2023) டிசம்பர் 28ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக வந்து கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் தமிழக அரசின் […]
தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் விஜயகாந்த் படங்கள்… தியேட்டரை நோக்கி படையெடுக்கும் ரசிகர்கள்

நீண்ட காலமாக உடல் நலமின்றி விஜயகாந்த் மரணம் அடைந்திருந்தார் என்றாலும், அவருக்கு சென்னையில் குவிந்த கூட்டமும் தினம் தினம் அவரது சமாதிக்கு வந்து சேரும் மக்கள் எண்ணிக்கையும் இன்னமும் குறையவே இல்லை. இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த பழைய படங்களை தூசு தட்டி திரையில் வெளியிடும் வேலைகள் ஜரூராக நடந்துவருகின்றன. இப்போதே தென் தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களில் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. வெளியூர்களில் திரையிடப்படும் படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் படையெடுத்து வருகிறார்கள். […]
கேப்டன் இல்லத்தில் அஞ்சலி: மகன்களுடன் சென்ற சிவகுமார்!

நடிகர் சிவக்குமார் தனது மகன்களும் நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தியுடன் சாலிகிராமத்தில் உள்ள கேப்டனின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சென்னை தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். […]
கலைஞர் நூற்றாண்டு விழா: முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் நடத்தப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருகிற 6ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயலால் தள்ளிவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழ்கள் முன்னதாகவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து […]
கேப்டன் விஜயகாந்த் மறைவு! வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய சசிகுமார்!

கேப்டன் விஜயகாந்த் கடந்த (2023) டிசம்பர் மாதம் 23ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திலும், பின்னர் தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். படப்பிடிப்புக்காகவும், சொந்த காரணங்களுக்காகவும் வெளிநாடு சென்றிருந்த நடிகர்கள் சிலர் கேப்டனின் மறைவுக்கு […]

