Share via:
எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு
தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு விஜய் அரசு
அதிகாரம் வழங்கி இருப்பது பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமப்
பொருள்கள் தங்கு தடையின்றி, போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக
அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்று செயல்படும் கருங்கல் மற்றும்
கல்குவாரிகள் சுமார் 1,845 வரை உள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைத் தவிர்த்து,
2,00க்கும் அதிகமான குவாரிகள் முறையான அனுமதியின்றி செயல்படுவதாக குற்றச்சாட்டுகள்
உள்ளன.
அமைச்சர் பிரபு உத்தரவின் பேரில் சமீபத்தில் நடந்த ஆய்வில் இந்த
முறைகேடு கண்டறியப்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட 27 மாவட்டங்களில் பணியாற்றிய கனிமளத்
துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கனிமவள பொருட்களை வெளிமாநிங்களுக்கு கொண்டு செல்ல
தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குவாரிகளில் இருந்து
தயார் செய்யப்படும் கனிம வளங்கள் பெரும்பாலானவை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விற்கப்படுகிறது.
அங்கு கூடுதல் விலை கிடைக்கிறது. எனவே வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல
தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதை பரிசீலனை செய்து அமைச்சர டி கே
பிரபு தற்போது கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தற்காலிக தடை விதித்து
அரசு உத்தரவிட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக விலை குறையுமா அல்லது வழக்கம்போல் ரகசியமாக கொண்டுசெல்லப்படுமா
என்பதைப் பார்க்கலாம்.