News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அவசரம் அவசரமாக கைது செய்து, அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், திமுகவின் சரண் ஜெயராமன் கைது விவகாரமும் தவெக தலையில் மண்ணள்ளிப் போட்டுள்ளது.

அதோடு, ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறி அமைச்சரவைக் கூட்டத்தில் தவெக ஆதரவாளர்கள் கலந்துகொண்டது குறித்து ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவும் விஜய்யை திணறடிக்கிறது.

நேற்றைய தினம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் அதிகாலை 4.30 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தி.மு.க ஜென்ஸீ செயற்பாட்டாளர் சரண் ஜெயராமன் என்பவர் கைது செய்யப்பட்டார்.  இந்த கைதை ரத்து செய்துள்ளது நீதிமன்றம்.

சரண் ஜெயராமன் கைதுக்கு ஒரே காரணம் அமைச்சர் சரத் கசக்கியது மாத்திரை இல்லை என சொன்னது தான்.. சரத் மீது நடவடிக்கை எடுக்காமல் கேள்வி கேட்டவர்களை முடக்க துடிப்பது என்ன விதமான தூய சக்தி என்று மக்கள் கேட்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனா கிடைத்த அவமானம் போதாதென்று ஒரு சாதாரண நிர்வாகியிடமும் அவமானப்பட்டுள்ளது தவெக அரசு. இந்நிலையில் இந்த விடுவிப்பை திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். விஜய் சட்டமன்றத்தில் செய்த ஸ்டைலை என்று ஒவ்வொரு திமுகவினரும் செய்து காட்டுகிறார்கள்.

முற்பகல் செய்தால் பிற்பகம் திரும்பக் கிடைக்கும் புரோ.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link