Share via:
சட்டமன்றத் தேர்தலில் எல்.முருகன் வெற்றி அடைந்துவிட்டால், அண்ணாமலைக்கு
மத்திய அமைச்சராகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அவிநாசி தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அடைவேன் என்று எல்.முருகன் பேசிக்கொண்டு இருக்கிறார். ஆனால், களம் அப்படி இல்லை என்றே
தெரிகிறது.
இந்த நிலையில் எல்.முருகன் தோல்வி அடைந்தாலும் அவர் மீண்டும் அமைச்சராகும்
வாய்ப்பு இல்லை, அவருக்கு தமிழக பாஜக தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.
நயினார் பதவி பறிபோகிறது.
அதேநேரம், தமிழகத்துக்கு அமைச்சராகும் வாய்ப்பு அண்ணாமலைக்குக்
கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் குஷியாக இருக்கிறார்கள்.
தமிழகத்தில் இருந்து எம்.பி.யாகும் வாய்ப்பு அண்ணாமலைக்கு இல்லை
என்றாலும், ஆந்திராவில் இருந்து எம்.பி. ஆகிறார். ஆந்திர பிரதேசத்தில் ஓ எஸ் ஆர் காங்கிரஸ்
கட்சியின் மூன்று ராஜ்யசபா எம்பிக்கள் ஜூன் மாதம் பதவி முடிவடைகிறது. மேலும் தெலுங்கு
தேசம் கட்சியில் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி காலியாகிறது.
ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்பதால்
நான்கு சீட்களும் தெலுங்கு தேசம் கட்சிக்குக் கிடைக்கிறது. அந்த நான்கில் ஒரு இடம்
அண்ணாமலைக்கு ஒதுக்கப்படும் என்கிறார்கள்.
அண்ணாமலை பாஜக தேசியத் தலைவராகிறார் என்றார்கள், வெளிநாட்டுத்
தூதர் என்றார்கள், இப்போது அமைச்சர் என்கிறார்கள்.
இதுவாவது நடக்குமா என்று பார்க்கலாம்.
