News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

தற்காலிகமாக ஈரான் போர் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த சில நாட்களுக்குள் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்து இருப்பதால் பெரிய அளவிலான தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் இருக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை இரண்டு முறை உயர்ந்துவிட்டது. இந்த மாதமே மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை ஆண்டுகளும் சர்வதேச ஆயில் விலை தங்களுக்குச் சாதகமாக இருந்ததால், கிடைத்த நிதியை வைத்துத்தான் மோசமான நிர்வாகத் தோல்விகளை மோடி அரசு மறைத்து சமாளித்தது.

தற்போதைய கச்சா எண்ணெய் விலை 85 டாலரைத் தாண்டியிருப்பது, இந்தியப் பொருளாதார உண்மையான பலவீனம் அம்பலமாகி நெருக்கடி முற்றியுள்ளது

இந்த விஷயத்தில் முதலில் கடைநிலை ஊழியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட போகிறார்கள். டெலிவரி ஆப்கள் அனைத்திலும் வேலை பாதியாக குறைந்தால் என்ன ஆகும் என்று யோசிங்க. பாதி ஆட்கள் மட்டுமே இருப்பார்கள். பெண்கள் பெரிதாக பாதிக்கப்படுபவர்கள்.

இந்த நிலையில் ராகுல் காந்தி, ‘’இந்தியர்கள் யாரும் தங்கள் வாழ்நாளில் காணாத பொருளாதார நெருக்கடி வந்து கொண்டு இருக்கிறது. ஒரு மாபெரும் புயல் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த புயல் மோடி, அதானி, அம்பானியைத் தாக்காது. இளைஞர்கள், தொழிலாளர்கள், சிறு வணிகர்களைத் தாக்கும்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

எனவே, இந்திய மக்கள் உஷாராக இருக்கவேண்டிய நேரம் இது. ஆடம்பரச் செலவு மற்றும் முதலீடுகளில் ஈடுபடுவதற்கு இது சரியான தருணம் அல்ல. பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link