News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பொதுக்குழு கூட்டுவதற்கு எதிர்ப்பணி தீவிரம் காட்டிவரும் நிலையில், இன்று மூத்த தலைவர் செம்மலை கட்சியில் இருந்து விலகியிருக்கிறார். அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவும் வரை தனது கட்சியின் ஆட்சிக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்பதால் விஜய், இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவதாக சொல்லப்படுகிறது.

அதனால் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஒருபுறமும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிருப்தியாளர்கள் மறுபுறமும் என அதிமுக தற்போது அதிகாரப்பூர்வமாக இரண்டு அணிகளாகப் பிரிந்து மோதி வருகிறது.

அதிமுக கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட விதிப்படி ஐந்தில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த ஆதரவை சி.வி. சண்முகம் அணியினர் திரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின்றன.

சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்தைக் கையில் வைத்துள்ள சி.வி. சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி கூட்டணி, எடப்பாடி பழனிசாமியைப் பதவியிலிருந்து நீக்க வியூகங்களை வகுத்துள்ளது. இபிஎஸ்-ஸை மீறிச் சி.வி. சண்முகம் நடத்திய எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், எஸ்.பி. வேலுமணி சட்டமன்றக் குழுத் தலைவராகவும், ஜி. ஹரி துணைத் தலைவராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், சண்முகம் டீமுக்கு ஆதரவாக அதிமுக கட்சியின் மாவட்டவாரியாக நிர்வாகிகளை விலை பேசும் வேலையை தவெக தொடங்கியுள்ளது. அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை விலைக்கு வாங்கிவிட்டால் தான் 5 வருடம் ஆட்சி நடத்த முடியும் என்பதாலே இப்படி தீவிரம் காட்டுகிறார்கள்.

எடப்பாடி தாக்குப் பிடிப்பாரா என்று பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link