News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் விஜய் நேற்று இரவு சந்தித்து வரவேற்றார்.

இந்த் தென்மண்டல முதல்வர் மாநாட்டுக்கு தலைவராக அமித்ஷா இருக்கையில், துணைத்தலைவராக விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகவே நேரில் சென்று வரவேற்பு கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம் திமுகவினர், ‘’மராட்டிய முதல்வர் பட்னாவிஸ், கூட்டணி கட்சியான ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இருக்கும் போது விஜய்க்கு ஏன் துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. ஒரு எம்.பி. பதவி கூட இல்லாத விஜய்க்கு இந்த பதவி கொடுக்கப்பட்டதற்கு காரணம், அவர்களுடைய ரகசியக் கூட்டணிதான். கரூர் சிபிஐ விசாரணைக்கு டெல்லிக்கு சென்று விட்டு வெளியே வந்து கையை காட்டிய போதே பாசிசத்தின் கள்ள உறவு கன்ஃபாம் ஆகிவிட்டது. அதை இன்று ஹோட்டலில் வரவேற்று உறுதி செய்திருக்கிறார்’’ என்கிறார்.

இதற்கு தவெகவினர், ‘’என்னதான் அரசியல் எதிரியாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வந்த அமித்ஷாவை சந்தித்தது ஒரு நல்ல அரசியல் நாகரீகம். முந்தைய திமுக அரசு பிரதமர் மோடியை விமான நிலையம் அல்லது தங்கும் விடுதியில் நேரில் சென்று வரவேற்காது. மேலும் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மிகக் குறைந்த நிலையிலான நிர்வாகிகளையே அனுப்பி வைக்கும்.

தமிழகத்தில் புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தபோது, முதல்வர் ஸ்டாலின் ஊட்டிக்குச் சென்று, அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட ஒரு மருத்துவமனையைத் திறந்து வைத்தார். ஆனால், விஜய் அரசியலுக்கு இத்தகைய இயல்பான கண்ணியத்தையும் நாகரிகத்தையும் கொண்டு வந்திருக்கிறார்.

அதேநேரம், அமித்ஷாவை வரவேற்ற விஜய் பூங்கொத்து கொடுத்ததுடன் நில்லாமல் ஒரு பாக்ஸ் கொடுத்தார். அது அமித்ஷாவுக்கு ஸ்பெஷல் டின்னர் பாக்ஸ் என்று கூறப்படுகிறது. விஜய் வீட்டில் அமித்ஷாவுக்காக ஸ்பெஷலாக தயாரித்த சப்பாத்தி, கிழங்கு பாஜி கொடுத்தார். இதுதான் தமிழர் பண்பு’’ என்று பாராட்டுகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link