News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

விஜய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாலும், இன்னமும் திமுக உறவை முறித்துக்கொள்ளாமல் அவ்வப்போது ஜால்ரா போட்டுவருகிறார் திருமாவளவன். திருமாவின் இந்த இரட்டை வேடத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று கிண்டல் செய்திருக்கிறார் வைகோ.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன் இல்லாத ஆட்சியை விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்சி 6 மாதம்கூட நீடிக்காது என சாபம் விட்டார்கள். இப்போது அந்த 6 மாதம் கூட பொறுக்க முடியாமல், ஆளுநரிடம் சென்று 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க வேண்டும் என திமுக புகார் கொடுக்கிறது.’’ என்றார்.

அப்போது செய்தியாளர்கள், தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்று இருந்தாலும், திமுக தலைவர் ஸ்டாலினுடன் கருத்து பங்கேற்பு தொடர்ந்து கொண்டே இருக்கும், தவிர்க்க மாட்டேன் என்று திருமாவளவன் பேசியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ’’இது நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து” என கிண்டலாக பதிலளித்தார்.

இதற்கு விளக்கம் அளித்திருக்கும் திருமா, ‘’பாரதிய ஜனதா கட்சியை தேசிய அளவில் எதிர்க்க தவெக, திமுகவை ஒரு அணியில் இணைப்பது எனது பார்வை. இது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்குப் புரியாது’’ என்று கூறியிருக்கிறார்.

இப்போது விசிகவினர் வைகோவை கடித்துத் துப்புகிறார்கள். *கரடியே காரித்துப்பியதைப் போல் தனது எம்எல்ஏ வை கூட தனது கட்டுப்பாட்டில் வைக்க முடியாத புரட்சியாளர். *தனது கட்சிக்காகவே உழைத்த போராளி மல்லை சத்யாவை தனது மகனுக்காக வெளியில் விரட்டிய வீரன். குடும்ப அரசியலுக்காக திமுகவை விட்டு வெளியே வந்து மீண்டும் திமுகவில் ஐக்கியம் ஆன அரசியல் அறிவாளி. *கலைஞர், புரட்சித் தலைவி, விஜயகாந்த் பாதுகாப்பேன் என்று சொல்லி அனைவரின் அரசியலை அழித்து ஒழித்த மிக ராசியானவர்’’ என்று விமர்சனம் செய்கிறார்கள்.

செம ஜாலியா இருக்குப்பா..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link