Share via:
முதல்வர் விஜய் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கான
அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார், பிறப்பித்துள்ளார்.
அதேபோல், அரசின் ஆலோசகர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்களின் அலுவலகங்களும்
நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுகின்றன.
தலைமை செயலகத்தில் இருந்து அலுவலகத்தை நாமக்கல் மாளிகைக்கு மாற்றுவதுதான்
விஜய் சொன்ன மாற்றமா என்று எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்கிறார்கள்.
இதுகுறித்து திமுகவினர், ‘’இப்போது முதல்வர் அமர்ந்திருக்கும்
திசை வாஸ்துபடி அமையவில்லையாம். எனவே அவரது ஆஸ்தான ஜோதிடர் சென்னையில் இருக்கும் பல்வேறு
அரசு அலுவலகங்களைப் பார்வையிட்டு, தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்திருக்கும் 10 அடுக்கு
மாளிகையான நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது மாடியைத் தேர்வு செய்திருக்கிறார்.
அண்மையில் கலெக்டர்கள் மாநாடு இந்த அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது,
இதையடுத்தே இந்த இடத்தை ஜோதிடர் ஓகே செய்திருக்கிறார். வாஸ்துபடி இடத்தை மாற்றுகிறார்
விஜய்’’ என்கிறார்கள்.
ஆனால் தவெகவினர், ‘’முதலமைச்சர், தலைமைச் செயலாளர், தனிச் செயலாளர்கள்,
ஆலோசகர்கள், முக்கிய அதிகாரிகள் அனைவரும் ஒரே தளத்தில், ஒரே ஒருங்கிணைப்பில் செயல்படும்
அமைப்பை விஜய் உருவாக்கியிருக்கிறார். எனவே, இனி தாமதங்களுக்கு இனி இடமில்லை. முடிவுகள்
உடனுக்குடன், உத்தரவுகள் மின்னல் வேகத்தில் நடக்கும். இதை ஜாதகம், வாஸ்து, கற்பனை கதை
பேசுபவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். இதுவே உண்மையான மாற்றம்.
விஜய் இங்கு வந்து செல்லும் நேரத்தைக் குறைப்பதற்காக சொந்த செலவில்
ஹெலிகாப்டர் வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளார். அந்த ஹெலிகாப்டரில் மாளிகையின் மேல்
மாடியில் இறங்கிவிடுவார். அவரால் டிராஃபிக் ஜாம் என்ற பஞ்சாயத்து இருக்காது’’ என்கிறார்கள்.
அதேபோல், தமிழ்நாட்டின்
வருவாய் பெருக்கக் குழுவின் தலைவராக டாக்டர் மான்டெக் சிங் அலுவாலியா
நியமிக்கப்பட்டது சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது. இவர் இந்தியாவின் முன்னாள்
நிதித்துறைச் செயலாளர் முன்னாள் வர்த்தகத் துறைச் செயலாளர், 2004 முதல் 2014 வரை
திட்டக் குழுவின் துணைத்
தலைவர் சர்வதேச நாணய நிதியத்தின் சுயாதீன மதிப்பீட்டு அலுவலகத்தின் முதல் இயக்குனர், இந்தியாவின்
1991-ஆம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடர்பான கொள்கை உருவாக்கும்
குழுவின் முக்கிய உறுப்பினர், பத்ம விபூஷன் விருது பெற்றவர்,
அவரது தலைமையில் அமைக்கப்படும்
குழு வரி ஏய்ப்பு மற்றும் வருவாய் இழப்புகள் தொழில்நுட்பம் சார்ந்த வரி மற்றும்
விதிமுறை இணக்கம் புதிய மற்றும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத வருவாய் ஆதாரங்கள் பொதுத்துறை
நிறுவனங்களின் ஈவுத்தொகை,
அரசு நிலம் மற்றும் சொத்துக்களை வருவாய் ஈட்டும் சொத்துகளாக மாற்றுதல், கட்டணங்கள், வரிகள் மற்றும் வரி விலக்குகள் மாற்றம் பற்றி ஆராயும்.
முதல்ல பாட்டிலுக்கு 10 ரூபாய்
பஞ்சாயத்தை குறைங்க சாரே
