News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடனே காங்கிரஸ் கட்சி ஒரே பாய்ச்சலாக விஜய் பக்கம் போய்விட்டது. கம்யூனிஸ்ட், விசிக, மதிமுகவும் விலகிவிட்டன. இவர்களுக்குப் பதிலடியாக காக்ரோச் ஜனதா பார்ட்டி எனப்படும் சிஜேபி கரப்பான் கட்சியுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சமீபத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், நாடு தழுவிய அளவில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்திய காக்ரோச் ஜனதா கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது. இந்தியாவை குலுக்கிய காக்ரோச் ஜனதா கட்சி, இப்போது தேசிய அரசியலின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது.

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்த மாணவர் எழுச்சியை தொடர்ந்து இந்திய அரசியலில் நிலை நிறுத்துவதற்கான வேலைகள் நடக்கின்றன. காக்ரோச் பாட்டியின் போராட்டத்தின் ஆரம்ப நாளிலிருந்தே சிஜேபி கட்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஆதரவை வழங்கி வந்தனர்.

இந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காக்ரோச் கட்சியுடன் திமுக கூட்டணி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. விஜய் போன்ற இன்ஸ்டா பிரபலத்துக்கு காக்ரோச் பார்ட்டியால் மட்டுமே சரியான பதிலடி தரமுடியும் என்று ஸ்டாலின் நம்புகிறார்.

அதோடு அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி திரட்டுவதற்கும் ஸ்டாலின் முயற்சி எடுத்துவருகிறார். இந்த கூட்டணியில் காக்ரோச் பார்ட்டிக்கு முக்கிய பங்கு இருங்கும். இந்த காக்ரோச் பாட்டியுடன்  தமிழ்நாட்டில் ஸ்டாலின், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், டெல்லியில் அர்விந்த் கெஜரிவால், கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி ஆகியோர் இணைய உள்ளனர். மேலும் சில மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

காக்ரோச் வந்துவிட்டால் விஜய் கட்சிக்கு ஆபத்து.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link