Share via:
0
Shares
தி.மு.க. எம்.பி.யான ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
தி.மு.க. எம்.பி.யான ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இது குறித்து அமலாக்கத்துறை தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டப்படி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டுக்கு சொந்தமான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது’’ என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது
Tagged latest