News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.  கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ.வான சி.அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாகவும், அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த பெண் அதிகாரி 31.07.2026 அன்றே, அதாவது 116 நாட்களுக்கு முன்பே தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். எனவே கவர்னரிடம் உதயநிதி ஸ்டாலின் 3 முக்கிய கோரிக்கைகள் வைத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மற்றும் துறையூர் சம்பவத்தில் தொடர்புடைய துணை சபாநாயகர் எம்.ரவிசங்கர் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது முதல் கோரிக்கை.

இந்த வழக்கு மாநில போலீஸ் விசாரணையில் இருந்தால் நியாயம் கிடைக்காது, எனவே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் புகாரை மறைத்ததாக கூறப்படும் தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் அவர்களையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த விஷயத்தில் உதயநிதி மீது பாய்ந்து பதிலடி கொடுத்துள்ளது தவெக ஐ.டி. விங். அந்த அறிக்கையில், “ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” என்று கேட்ட பேரறிஞர் அண்ணாவின் திமுகவை கபளீகரம் செய்து, குடும்பக் கட்சியாக மாற்றிய மண்ணாங்கட்டிப் பரம்பரை, தாங்கள் கொள்கைக் குன்றுகள் என்று மேடைக்கு மேடை முழங்குவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் என்பதை இன்றைய ஆளுநர் சந்திப்பின் மூலம் நிரூபிக்கிறது.

ஆட்சியில் இருந்தவரை ஆளுநரைப் பேசவிடாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரித்துவிட்டு, இப்போது “ஆபத்பாந்தவனே” என்று ஆளுநரின் காலில் விழவும் தயாராகிவிட்டனர்.

“கலைஞரின் ஆசி பெற்ற சின்னம் தாமரை” என்ற வரலாறு மீண்டும் அரங்கேறப் போகிறது. அதற்கான அறிகுறிதான், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதயநிதி தலைமை நிர்வாகியாக இருக்கும் முரசொலியில் பாஜகவின் மாநிலத் தலைவரின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது.

பாசிசப் பாயாசம் பருகக் கொத்தடிமைகள் தயாராக இருக்கையில், மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு கொள்கையாவது, கொய்யாக்காயாவது என்ற மனநிலைதான் ! அன்று போலவே பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்க்கும் பணியை திமுக தலைமையேற்று நடத்தவிருக்கிறது. திமுக ஒரு தீயசக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு வாழ்த்துகள்’’ என்று பாஜக கூட்டணியை அம்பலப்படுத்தியிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link