News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படாதது ஏன் என்றும் அரசியல் அமைப்பு சாசனம் பிரிவு 167-B இன் கீழ் தமிழக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியதாக வரும் தகவல்கள் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரைச் சந்தித்து மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு வில்லங்கத்தை உருவாக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பு திட்டமிட்டு கடிதம் அனுப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது.

 

நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதா என்பதைத் தீர்மானித்துத் தண்டனை வழங்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அப்படியிருக்கும்போது கடிதம் கேட்பது எதற்கு என விசாரித்தோம். இதுகுறித்து பேசும் அரசியல் ஆலோச்ககள், ‘’ஆளுநரின் கடிதம் ஒரு ‘எச்சரிக்கை மணி‘ போன்றது. அதனால் நேரடியாக யாரையும் தண்டிக்க முடியாது. மாநில அரசின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க இது ஒரு அதிகாரப்பூர்வ ஆதாரமாகப் பயன்படும். ஆனால்.. தூணில் தீபம் ஏற்றவில்லை என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைக் கலைப்பது சாத்தியமில்லை. இது கவர்னருக்கும் தெரியும்

நீதிமன்றத்துக்குக் கொடுத்தது போலவே கவர்னருக்கும், மாவட்ட நிர்வாகம் தயாராக இருந்தபோதிலும், கோயில் அறங்காவலர் குழு ஆகம விதிகளைக் காரணம் காட்டி தீபம் ஏற்ற மறுத்துவிட்டது என்றே அரசு தெரிவிக்கும்.

மாநில அரசு ஏதேனும் தவறு செய்தால், முதலில் மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 355 ன் கீழ் மாநில அரசுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.  அதைத் தொடர்ந்து மாநில அரசு வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறினால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துச் சிந்திக்க முடியும். எனவே, அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதே உண்மை.

இன்று உதயநிதி கவர்னரை சந்தித்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. குறித்து புகார் கொடுக்க இருக்கிறார். இது குறித்தும் கவர்னர் அடுத்து கேள்வி எழுப்புவார் என்று சொல்லப்படுகிறது.

விஜய் ஆட்சிக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்க முயற்சி செய்பவர்கள் பட்டியலில் கவர்னரும் இணைந்துவிட்டார். ஆனால், விஜய்க்கு இதனால் எந்த நெருக்கடியும் இல்லை. ஏனென்றால், அவருக்கு நன்றாகத் தெரியும். ஆட்சியைக் கலைக்க முடியாது. அப்படி ஆட்சியைக் கலைத்தால் மீண்டும் தவெக மிகப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link