News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கேரளம் குறைவான விலையில் மின்சாரம் கொள்முதல் செய்திருக்கும்போது தமிழகம் மட்டும் அதிக விலை கொடுத்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தவெகவுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

குறைவான விலைக்கு எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று கேரளா இன்று தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் நிர்மல்குமார் திமுக தலைவருக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அவர், ‘’கடந்த 70 வருடங்களாக திமுக தமிழகத்திற்குச் செய்த பேரழிவைச் சீரமைக்க ஒவ்வொரு நாளும் முதல்வரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் போராடி வருகிறோம். நீங்கள் முதல்வராக இருந்தபோது உங்கள் ஆட்சியின் லட்சணத்திற்கு ஒரு சின்ன உதாரணம்: முன்னாள் அமைச்சர் நேரு அவர்கள் மீது 2 வழக்குகள், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு மீது 2 வழக்குகள், உங்கள் மகனின் நண்பர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் அவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு லஞ்சம் வாங்கிச் சிக்கி சிறையில் இருக்கிறார்.

இதைவிட வெட்கக்கேடு என்ன தெரியுமா? பெரியார் உலகத்திலேயே, உலகில் வேறு எங்கும் பார்க்காத வகையில் போலி நூல்கள் என்ற பெயரில் ஊழல்! இன்னும் ஒரு படி மேலே போய் உங்கள் தலைமையில் இருந்த காவல்துறை, குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை செய்த ஒரு கொடிய குற்றவாளியைக் காப்பாற்றி, ஒரு வருடத்திற்கு மேல் உங்கள் அரசு எல்லா மட்டத்திலும் பண ஆதாயத்தைப் பெற்று அந்தக் குற்றவாளியைப் பாதுகாத்து வந்திருக்கிறீர்கள். இதற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

மீண்டும் உறுதியாகச் சொல்கிறோம்: அண்டை மாநிலங்கள் இருளில் மூழ்கி இருந்தபோது தமிழக மக்கள் இருளில் மூழ்கிவிடக் கூடாது மற்றும் தமிழகத் தொழில்துறை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே சில தினங்கள் குறுகிய கால அடிப்படையில் கேஸ் பவர் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது. அதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதை எப்போதும் நிரூபிக்கத் தயாராக உள்ளோம்.

இனி வரும் காலங்களில் அதிக விலை கொடுத்து வாங்காத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். திமுகவின் கறுப்புப் பக்கங்களை மறைக்கப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுங்கள் ஸ்டாலின் சார்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைகால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்காக வெளியிட்ட டெண்டர் திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி யூனிட் ஒன்றுக்கு ரூ.9.50 ரூபாய் முதல் ரூ.13 வரை விலைப்புள்ளிகள் பெறப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link