News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவுக்கு த.வெ.க.  எம்.எல்.ஏ.வான அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் குறித்து தலைமை செயலாளர் எவ்வித விளக்கத்தையும் அளிக்காத நிலையில் ஒன்றிய அரசுக்கு கலெக்டர் பத்மஜா முறைப்படி தகவல் அனுப்பியுள்ளார் என்று இன்று தினமலர் நாளிதழ் ஒரு செய்தி வெளியானதை அடுத்து விவகாரம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ், தினத்தந்தி நாளிதழ்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. சமீபத்தில் நடந்த மீட்டிங்கில் எம்எல்ஏ அருள் விக்னேஷை முதல்வர் எச்சரித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

அதேநேரம், நூலக ஊழல் விவகாரத்தை மறைப்பதற்காக திமுக திட்டமிட்டு இந்த பொய் செய்தியை பரப்புகிறது என்று அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ் ஆரம்பம் முதலே சொல்லிக்கொண்டுள்ளனர். ஆனாலும், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை.

இது அவதூறு செய்தி என்றால் இதுவரை ஏன் தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது பொய் என்று எம்.எல்.ஏ. கூறினாலும் கலெக்டர் ஏன் மறுக்கவில்லை.? என்பதெல்லாம் மக்கள் மனதில் கேள்வியாக நிற்கிறது.

அமைச்சர்களால் இந்த விவகாரத்தை சரிசெய்ய முடியாத பட்சத்தில் விஜய் நேரடியாக களத்தில் இறங்குவார் என்று சொல்லப்படுகிறது. எனவே, இரண்டு நாட்களுக்குள் கள்ளக்குறிச்சி கலெக்டர் நேரடியாக முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேசுவார். அந்த சந்திப்புக்குப் பிறகு திட்டமிட்டு வதந்தி கிளப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.

முதல்வருடன் சந்திப்பு நடத்துவதற்காகவே அமைச்சர் வன்னியரசு சமீபத்தில் கலெக்டரை நேரில் சந்தித்துப் பேசியதாக சொல்லப்படுகிறது. சர்ச்சைக்கு ஒரு முடிவு கிடைக்கட்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link