News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழகத்தில் அரசு வேலை தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் சூப்பர் ஹிட் செய்தி அறிவித்துள்ளார். அதாவது, வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் சட்டத் திருத்தம் விஜய் அரசில் செய்யப்பட்டுள்ளது.  இதுவரை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிரப்பப்பட்டு வந்தன.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பணியிடங்கள் அந்தந்த உள்ளாட்சிகள் மூலமாகவே நிரப்பப்பட்டு வந்தன. இதில் தான் கடந்த காலத்தில் பெரும் முறைகேடு நடந்ததாக புகார்கள் வெளியானது.

கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள் சிபாரிசு, பணம் கொடுத்து வேலை என பின்வாசல் வழியாக ஆட்கள் நியமிக்கப்பட்டதாக இளைஞர்கள் கொந்தளித்தனர். மெரிட் உள்ளவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே, இந்த பணியிடங்களை இனி டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பும் வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதன்மூலம் 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளில் அரசியல் தலையீடு மற்றும் சிபாரிசுகளுக்கு இடமின்றி, தகுதியின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் பணியாளர் தேர்வு நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பணம் கொடுத்து வேலை பெறும் பின்வாசல் நியமனங்களைத் தடுத்து, தகுதியுள்ள இளைஞர்களின் அரசு வேலைக் கனவுக்கு வழிவகுக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது இளைஞர் நலன் பேணும் தவெக அரசு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link