News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையின் புதிய இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டது, மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறையை மகேஸ்வரி  கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தார்கள்..

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்ற  பிரேம் ஆனந்த் சின்ஹா  தமிழக காவல்துறையில் மிகவும் நேர்மையான, கண்டிப்பான, அதே நேரத்தில் மக்களிடம் அன்பான அதிகாரி என பெயரெடுத்தவர்.

2001-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தற்போது தமிழக அரசின் மிக முக்கியமான பொறுப்பான லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறைஇயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக சிறப்பாக பணியாற்றிய இவருக்கு, இது மிகப்பெரிய பதவி உயர்வாக கருதப்படுகிறது.

இவர் கொரோனா காலத்தில் சென்னையில் இபாஸ் முறையை கொண்டு வந்தவர்.  தென் மண்டல ஐஜியாக இருந்தபோது, பதற்றமான தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் நினைவு நாள் போன்ற நிகழ்வுகளை அமைதியாக நடத்தினார். பழனி, திருப்பரங்குன்றம் தைப்பூசம், குலசேகரப்பட்டினம் தசரா விழாக்களில் தொழில்நுட்பம் மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தி சாதனை படைத்தார்.

சாதி மோதல்கள், பழிவாங்கும் கொலைகள், போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கியவர்.  மேலும், தமிழக முதலமைச்சரின் சிறந்த பொது சேவைக்கான பதக்கம் பெற்றவர்.

 தேவகோட்டை ஏ.எஸ்.பி.யாக தொடங்கி, பெரம்பலூர், காஞ்சிபுரம் எஸ்.பி, மதுரை கமிஷனர், ஆவடி, தாம்பரம் கமிஷனர் என அனைத்து பதவிகளிலும் முத்திரை பதித்தவர்.  தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் பொறுப்பேற்பதால், தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் வேகமெடுக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நியமனத்தால் திமுக மாஜிக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link