Share via:
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் அக்கம்பக்கத்தில்
இருக்கும் மீனவர்கள் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதாலே, அங்கு அமைப்பதற்கு விரும்பினார்
விஜய். ஆனால், இதனை மீனவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனால், புதிய தலைமைச் செயலகம்
கட்டுமான பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் 1200 கோடி செலவில்
15 மாடி கொண்ட தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக முதற்கட்டமாக
நிலம் கையகப்படுத்தும் பணிக்கு அரசு ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை
சார்பில் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆனால், புதிய தலைமைச் செயலகத்துக்கு மீனவர்கள் மத்தியில் கடும்
எதிர்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் விஜய் மீனவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில்
இறங்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், மீனவர் சங்கத்தினர் சிலர் ஸ்டாலினை சந்தித்துப்
பேசியதை அடுத்து, விவகாரம் அரசியலாக மாறுகிறது.
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்ந்து மீனவர்கள் உறுதியாக இருப்பதால்
புதிய தலைமைச் செயலகம் திட்டத்தை நிரந்தரமாக கைவிட முடிவு செய்திருப்பதாக முதல்வருக்கு
நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீனவர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்யும் ஸ்டாலினுக்குப் பாடம்
புகட்டும் வகையில் அடுத்து ஒரு அதிரடி கிளம்பும் என்கிறார்கள். என்ன நடக்கும் என்று
பார்க்கலாம்.

