Share via:
தமிழ்நாடு முழுவதும் நேற்று அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை
நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.73 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் யுபிஐ பணப்
பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கீழ் வருவாய், நகராட்சி, பத்திரப்பதிவு, நிர்வாக,
வட்டார போக்குவரத்து என 43 துறைகள் உள்ளது. இதில் அரசுக்கு நேரடி வருவாய் தரும் துறைகளில்
பணியாற்றும் அரசு அதிகாரிகள் முதல் கடை சிலை ஊழியர்கள் வரை பொதுமக்களிடம் இருந்து அதிகளவில்
லஞ்சம் பணம் பெறுவதாக தொடர் புகார்கள் எழுந்தது.
அதைதொடர்ந்து துறை வாரியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அரசு
துறை அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தில் கணக்கில் வராத பல லட்சம் பணம் பறிமுதல் செய்து
வருகின்றனர். தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகளவில் இருந்ததால் அரசு அதிகாரிகள்
ஜிபே மூலம் பணம் பெற்று வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் அரசு அதிகாரிகள்
பயன்படுத்தும் ஜிபே, போன் பே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை
சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நிகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில்
அதிகளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், பொதுமக்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க அதிகளவில்
பணம் வசூலிக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து
லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும்
குடிநீர் வழங்கல் துறையின் கீழ் இயங்கும் 43 அலுவலகங்களில் நேற்று அந்தந்த மாவட்ட லஞ்ச
ஒழிப்புத்துறை டிஎஸ்பிக்கள் தலைமையில் அதிரடி சோதனை நடந்தது.
இந்த சோதனையில் 350க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒரே
நேரத்தில் நடத்தினர். இந்த சோதனையின் போது, அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் யாரையும்
வெளியே விடவில்லை. அதேபோல் அலுவலகத்திற்குள் யாரையும் உள்ளே விடவில்லை.
40 நகராட்சி,பேரூராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய
சோதனையில் 173.78 லட்சம் ரூபாய் பணம், ஜிபே மூலம் 1.73 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை
கண்டறிப்பட்டுள்ளது.
விஜய் ஆட்சிக்கு வண்டு 4 மாதங்களுக்குப் பிறகும் இவ்வளவு பணம்
லஞ்ச ஒழிப்புத் துறையால் கண்டுபிடிக்கப்படுகிறது என்றால், மேலிடத்தில் இவர்களுக்கு
இன்னமும் ஆதரவு இருகிறது என்பதே அர்த்தம். எனவே, ஊழல் செய்யும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலமே இதை சரிசெய்ய முடியும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
அதோடு, பணம் பிடிபடும் செய்தி தான் வருதே தவிர ஊழல் அரசு ஊழியர்களை
கைது செய்யும் செய்தி எதுவும் வருவதில்லை. வழக்கு பதிவு செய்யப்படும் செய்திகளை வெளியிடலாம்.
அதையும் செய்யாமல் இந்த ஊழல்வாதிகளை எப்படி பயம் காட்டுவது? பயம் வராமல் அவர்கள் எப்படி
திருந்துவார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
விஜய் சீரியஸ் நடவடிக்கை எடுப்பார் என்றே நம்புகிறார்கள்.

