News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை இன்று காலை மாணவர்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்.

சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கம் இன்று ஆரம்பமானது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் தினமும் காலையில் கிச்சடி, பொங்கல் என தினமும் ஏதேனும் ஒரு வகை உணவு வழங்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 37,447 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 19.34 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, காலை உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டு, 6 முதல் 8ம் வகுப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கத் தொடக்க விழா இன்று காலை 8.30 மணி அளவில் நடைபெற்றது.

இன்று திட்டம் ஆரம்பம் தொடர்பாக பெற்றோருக்கு விஜய் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதில், “அன்பார்ந்த பெற்றோருக்கு, வணக்கம். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்து, சிறப்பாகக் கல்வி கற்பதற்கு ஏதுவாக சத்தான, சுவையான காலை உணவு 22.9.2026 (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

இன்றைய மெனுவில் மாணவர்களுக்கு வெண் பொங்கல், சாம்பார் வழங்கப்பட்டது. முதல் நாள் என்பதால் இன்று சக்கரைப் பொங்கலும் வழங்கப்பட்டது.  மாணவர்களுக்கு உணவு பரிமாறித் தொடங்கி வைத்த முதல்வர் விஜய், மாணவர்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்தினார்.

முதல்வர் விஜய்யைக் காண ஏராளமான பெற்றோர்களும் ரசிகர்களும் காலை முதலே காத்துக்கிடந்தனர். அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்து சொல்லி கிளம்பினார் விஜய். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link