Share via:
முதலமைச்சர் விஜய், கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீதான போக்சோ
வழக்கை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், திமுக அமைச்சர் தொடங்கி காவல் துறையினர்
பலரும் கைது செய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கில் தொடர்புடைய ஒருவரையும்
விடக்கூடாது என கடந்த வாரம் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து ஆலோசித்த நிலையில்,
இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த மீண்டும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார் என
தகவல் வெளியாகி உள்ளது. தொழிலதிபர் வீரமணி மீது பல சிறுமிகள் தாமாக முன்வந்து பாலியல்
புகார் கூறியுள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கடந்த அக்டோபர் 2025-ல் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சென்னை காவல்
துறையினரிடம் ஒரு பென் டிரைவை வழங்கினார். அதில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட
காட்சிகள் இருந்தன. ஆனால், திமுக அரசு இந்த விஷயத்தை மூடி மறைத்தது.
வீரமணி வழக்கில் ஆரம்பகட்ட விசாரணையின் போது “போதுமான ஆதாரங்கள்
இல்லை” என்ற காரணத்தை முன்வைத்து வழக்கை மூடுவதற்கு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்டது. ஆனால் சிறப்பு போக்ஸோ நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, வழக்கைத்
தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.
அதன் பின்னர் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வீரமணி உள்ளிட்டோர்
கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது அந்த வழக்கில் முக்கியமான திருப்பமாக, வீடியோவில்
இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுமி அடையாளம் காணப்பட்டு, அவரது வாக்குமூலம் நீதிமன்றத்தில்
பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வேறு சில பெண்கள் மற்றும் சிறுமிகளும் வாக்குமூலம்
அளித்துள்ளதாக போலீஸ் தரப்பை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச்
சேர்ந்த 9 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்
ஒருவரைக் கண்டுபிடித்து காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரமணியை, உயர்
நீதிமன்ற அனுமதியுடன் காவல்துறை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும்
இதில் தொடர்புடைய பிற பிரமுகர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
ஆனால், பணம் வாங்கிக்கொண்டு அவர்களைக் காப்பாற்ற முயன்ற காவல்துறை
அதிகாரிகளான யாஸ்மின், ராதிகா மற்றும் அருண் ஆகியோர் மிகப் பெரிய குற்றவாளிகள். இவர்கள்
பணியில் தொடரக் கூடாது. 2003ம் ஆண்டு ஒரு குழந்தை இறந்த தகவலையும் இவர்கள் மூடி மறைத்துள்ளார்கள்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் “ஆதாரம் இல்லை” என்று கூறப்பட்ட நிலையில், பின்னர்
எவ்வாறு புதிய ஆதாரங்கள், வீடியோ தொடர்பான விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின்
வாக்குமூலங்கள் வெளிவந்தன? விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் என்ன நடந்தது? யார் அந்த முடிவை
எடுத்தார்கள்? எந்த ஆதாரங்கள் அப்போது பரிசீலிக்கப்பட்டன? ஏன் அந்த வழக்கு முடிவுக்கு
கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு உருவானது?
84 வயது ஆகிறது என்ற காரணத்தைக் காட்டி, வீரமணியை போலீஸ் காவலில்
எடுக்காமல் சிறையிலேயே வைத்து விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். இவ்வளவு கொடூரமான குற்றங்களைச்
செய்தவருக்கு சிறையில் ‘ஏ கிளாஸ்’ முதல் வகுப்புச்
சலுகை வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி கட்டுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக, கொடூர குற்றவாளிகளுக்கு
இந்தச் சலுகையை வழங்கக் கூடாது.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி குற்றத்தை மறைக்க உதவிய திமுக பெண் அமைச்சர்
மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வீரமணிக்கு துணை நின்றதாக குற்றச்சாட்டு உள்ளவர்கள்
யாராக இருந்தாலும், ஆதாரங்கள் நிரூபித்தால் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட
வேண்டும். அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீதும் தனியாக விசாரணை நடத்தப்பட
வேண்டும். தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால்
மேல்மட்ட அல்லது சுயாதீன விசாரணை அமைப்பின் கண்காணிப்பில் விசாரணையை நடத்த வேண்டும்.
இந்த வழக்கு யாருடைய அரசியல் வெற்றிக்காகவும் அல்ல. இந்தக் குழந்தைகளின்
நீதிக்காக! அவர்களின் கண்ணீருக்கு பதில் வேண்டும். அவர்களின் வலிக்கு நீதி வேண்டும்.
குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதுதான்
உண்மையான நீதி. அதுதான் இந்த சமூகத்தின் கடமை.
அதை விஜய் செய்து முடிப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள். அதையே
விஜய்யின் நடவடிக்கையும் சுட்டிக் காட்டுகிறது.

