News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் ஐயுஎம்எல் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். முதல்வர் விஜய்யின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் அர்லேகர் இவர்களை அமைச்சர் ஆக்கியிருக்கிறார்.

இந்த பதவி குறித்து வன்னியரசு, ‘’என்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ள தலைவர் திருமாவளவனுக்கு நன்றி… மற்றவர்களுக்கு நாங்கள் ரோல் மாடலாக இருப்போம்… விசிகவிற்கு மட்டுமல்ல அதிகாரப் பகிர்வை விரும்புகின்ற அத்தனை பேருக்கும் இது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும்… அதிகாரப் பகிர்வு என்பதே அம்பேத்கருடைய கனவு, அந்தக் கனவை நோக்கி நாங்கள் நகர்கிறோம்..’’ என்று கூறியிருக்கிறார்.

அதேநேரம், இந்த நகர்வு திமுகவுக்கு கடும் அதிருப்தி தந்துள்ளது. ஆ.ராசா அவரது எக்ஸ் பக்கத்தில், ‘’முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்;பூ முடித்தவனை புறந்தள்ளி — புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை. பெரியாரின்‘காலதேச வர்த்தமான’ த்திற்குகாத்திருப்போம்;  என்றாலும் களமாடுவோம் !வெற்றி நமக்கே’’ என்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.

இதற்கு விசிகவின் எஸ்.எஸ்.பாலாஜி, ‘’அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம். ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது. அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்துப் போவீர்’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், விஜய் அடுத்த தேர்தலுக்கு காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், முஸ்லீம் லீக் என மிகச்சரியான கூட்டணியை இப்போதே அமைத்துவிட்டார். இதில் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்துவிடும் என்கிறார்கள்.

புதிய திருப்பம்தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link