Share via:
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முதலமைச்சர்
விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் இன்று அரங்கேறுகிறது.
கடந்த மே 10 அன்று முதற்கட்டமாக முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில்,
இன்று மேலும் 23 பேர் புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மிக முக்கிய ஹைலைட்டாக, சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ்
கட்சி தமிழக அமைச்சரவையில் அதிகாரப்பூர்வமாகப் பங்கெடுக்கிறது.
அதன்படி இன்று 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அவர்களின்
பெயர் பட்டியல் வருமாறு:
1. ஸ்ரீநாத்
– தூத்துக்குடி எம்.எல்.ஏ.
2. கமலி –
அவிநாசி எம்எல்ஏ
3. சி விஜயலட்சுமி
– குமாரபாளையம் எம்எல்ஏ
4. ரஞ்சித்
குமுார் – காஞ்சிபுரம் எம்எல்ஏ
5. வினோத்
– கும்பகோணம் எம்எல்ஏ
6. ராஜீவ்
– திருவாடானை எம்எல்ஏ
7. ராஜ் குமார்
– கடலூர் எம்எல்ஏ
8. காந்திராஜ்
– அரக்கோணம் எம்எல்ஏ
9. மதன் ராஜா
– ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ
10. ஜெகதீஷ்வரி
– ராஜபாளையம் எம்எல்ஏ
11. ராஜேஷ்
குமார் – கிள்ளியூர் எம்எல்ஏ (காங்கிரஸ்)
12. விஜய் பாலாஜி
– ஈரோடு கிழக்கு எம்எல்ஏ
13. லோகேஷ்
தமிழ் செல்வன் – ராசிபுரம் எம்எல்ஏ
14. விஜய் தமிழன்
பார்த்திபன் – சேலம் தெற்கு எம்எல்ஏ
15. ரமேஷ்
– ஸ்ரீரங்கம் எம்எல்ஏ
16. விஸ்வநாதன்
– மேலூர் எம்எல்ஏ (காங்கிரஸ்)
17. குமார்
– வேளச்சேரி எம்எல்ஏ
18. தென்னரசு
– ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ
19. சம்பத்குமார்
– கோவை வடக்கு எம்எல்ஏ
20. முகமது
பர்வாஸ் – அறந்தாங்கி எம்எல்ஏ
21. சரத்குமார்
– தாம்பரம் எம்எல்ஏ
22. மரிய வில்சன்
– ஆர்கே நகர் எம்எல்ஏ
23. விக்னேஷ்
– கிணத்துக்கடவு எம்எல்ஏ
இவர்களில் 21 பேர் தவெகவை சேர்ந்தவர்கள். 2 பேர் காங்கிரஸ் கட்சியை
சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஒட்டுமொத்தமாக 35 பேர் அமைச்சராக முடியும் என்ற நிலையில் இப்போது
33 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இன்னமும் இரண்டு இடம் காலியாக விட்டு வைக்கப்பட்டுள்ளது.
திருமாவளவனுக்கு என்று சொல்லப்பட்டாலும், அவர் கம்யூனிஸ்ட் கட்சிகளையும்
எதிர்பார்ப்பதால் வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. அதிமுகவின் சிவி சண்முகம்
கும்பலுக்கும் நோ சொல்லப்பட்டுள்ளது. இப்போதைக்கு மேலும் விரிவாக்கம் செய்வதற்கு வாய்ப்பு
இல்லை.