News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை கூட்டிவைத்து முதல்வர் பதவிக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. அதேபாணியில் இப்போது புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எப்படியும் இபிஎஸ் முதல்வர் அல்லது துணை முதல்வர் ஆவது உறுதி என்கிறார்கள்.

விஜய்க்கு போதிய எண்ணிக்கை இல்லை என்றதும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கோரியிருந்தால் இத்தனை சிக்கல் ஏற்பட்டிருக்காது. ஏனென்றால் ஓர் ஆண்டுக்கு வெளியே இருந்து ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலித்திருக்கும் மனநிலையில் எடப்பாடி இருந்தார்.

ஆனால், செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் அதிமுக எம்.எல்.ஏ.க்களை தங்கள்பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, கட்சிக்குள் பிளவை உருவாக்க முயன்றதாக வந்த தகவல்கள் எடப்பாடியை கடுமையாக எரிச்சலடையச் செய்துவிட்டது.

இதேபோல், திமுக தரப்பிலும் விஜய் மீது அதிருப்தி அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, திமுக கூட்டணியின் ஆதரவிலும் தேர்தல் நிதி உதவியுடனும் வெற்றி பெற்ற ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்தது திமுக தலைமையைக் கடுப்படையச் செய்துவிட்டது.

மேலும், உதயநிதி ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் விஜய் முதலமைச்சராக உயர்வதை விரும்பவில்லை. அதனால் எடப்பாடி முதல்வராகலாம் விஜய் வேண்டாம் என்ற மனநிலைக்கு அவர் வந்துவிட்டார்.

இப்போதும் விஜய் பக்கம் பேச்சுவார்த்தை நடக்கிறது. 118 என்ற எண் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. அதனால் எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கலாம். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கலாம் என்று சொல்லிவருகிறார்கள்.

எப்படியானாலும் எடப்பாடிக்குப் பதவி உறுதியாகியுள்ளது. விஜய் என்ன முடிவு எடுக்கப்போகிறார்..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link