Share via:
காமராஜர் மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தார். எம்.ஜி.ஆர். அதை
சத்துணவுத் திட்டமாக மாற்றினார். கருணாநிதி அதில் முட்டை கொண்டுவந்தார். ஜெயலலிதா வெரைட்டி
ரைஸ் என்று மாற்றினார். இந்த வரிசையில் மதிய உணவுக்கு பிரியாணி போடுவதற்கு விஜய் ஆலோசனை
செய்வதாக கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்யும் விதமாக தமிழக அரசு பள்ளிகளில்
வாரம் ஒருநாள் பிரியாணி வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்
என்றே கூறப்படுகிறது.
அதேநேரம் சிக்கன் போடுவதால் சிக்கன் என்கிறார் திமுக ஆசிரியர்.
அவரது அறிக்கையில், ‘’அரசுப் பள்ளிகளில் மிகவும் சிறப்பான அதே நேரம் சவாலான விஷயங்களில்
ஒன்று மதிய உணவு. சற்றே பிசகினாலும் மிகப்பெரிய அளவில் குழந்தைகளுக்கு பாதிப்பையும்,துறைக்கு
அவப் பெயரையும் ஏற்படுத்தக்கூடிய இடம் இது. முதலில் தற்போது உள்ள சத்துணவிற்கான ஒவ்வொரு
மாணவனுக்கும் தரப்படும் தொகை மிகவும் குறைவு அதை உயர்த்த வேண்டும்.
மேலும் தற்போது வழங்கப்படும் முட்டையிலேயே வருடத்திற்கு நான்கு
முறை பெற்றோர் சொல்லும் புகார்கள்,அழுகிய முட்டை,குஞ்சு பொரிக்கும் நிலை முட்டை, துர்நாற்றம்
வீசும் முட்டை என்று பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் வரும். கோழி இறைச்சி என்பது நல்ல
விஷயம்தான் ஆனால் அதனை பள்ளிக்கு விற்பனை செய்பவர்கள் குறை இல்லாமல் தர வேண்டும். அது
கெடாத புதிய இறைச்சிதானா,குளிசான பெட்டியில் வைத்து வந்ததா என்று நம் ஒவ்வொரு நாளும்
சோதனை செய்ய முடியாது.
அதனை சமைப்பவர்கள் தரமாக சுத்தப்படுத்தி சரியாக சமைக்க வேண்டும்.
இப்பொழுது தரும் நிதியில் நிச்சயமாக சுமாரான பிரியாணி கூட மாணவர்களுக்கு தர முடியாது
சமையலுக்கு தரக்கூடிய பொருட்களை சிறப்பாக தர வேண்டும். மேலும் சமையலராக உள்ளவர்கள்
50 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம் அவர்களுக்கு சரியான பதத்தில் வேகவைத்து பிரியாணி
செய்ய தெரியுமா என்பதை சொல்ல இயலாது.
இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம் இதற்கு பதிலாக
மூன்று மணி வாக்கில் மாணவர்களுக்கு குறைந்த அளவில் சுவையான சத்தான சிற்றுண்டிகளை வழங்கலாம்.’’
என்கிறார்.
எத்தனை சிக்கல் வந்தாலும் பரவாயில்லை, பிரியாணி போட்டே தீரவேண்டும்
என்று நினைக்கிறார் விஜய். மாணவர்களும் விஜய் ஏமாற்ற மாட்டார் என்றே நம்புகிறார்கள்.
