News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் நெருக்கமாக இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பிஎஸ் அதிகாரிகள் தூக்கியடிக்கப்படுகிறார்கள். தேர்தல் நெருங்கிவிட்டநிலையில், தமிழக காவல் துறையில் உளவுத் துறை ஐ.ஜி.யாக உள்ள செந்தில்வேலன் மாற்றப்பட்டு, புதிய ஐ.ஜி.யாக அவினாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், சட்டம் – ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கடராமன், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் மாற்றப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல் துறையின் உளவுத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த செந்தில் வேலன் நேற்று மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, காவல் துறை தொழில்நுட்ப சேவைப் பிரிவு ஐ.ஜி.யாக உள்ள அவினாஷ் குமார் புதிய உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரில் இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.

தேர்தல் காலங்களில் உளவுத்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதால் ஸ்டாலின் ஆதரவாளர் மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இதற்கு முன்பு அதிகாரிகள் மாற்றம் நடந்தபோது டிஆர் பாலு தேர்தல் ஆணையம் மீது வலுவாக புகார் எழுப்பினார். ஆனால், இப்போது தேர்தல் நெருங்கிவிட்டது என்பதால், இதை கண்டுகொள்ளாமல் விடுகிறார்களாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link