News

விஜய்க்கு அமைச்சரவை ரெடி. த்ரிஷாவுக்கு பதவி இல்லையாம்

Follow Us

ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும் அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து மாடல் அமைச்சரவை அமைத்து விளையாடுவார்கள். யார், யாருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும், யாருக்கு என்ன பதவி என்று அவர்களே நியமனம் செய்து கலாய்ப்பார்கள்.

இந்த முறை அந்த விளையாட்டை விஜய் கட்சியினர் விளையாடி வருகிறார். தேர்தல் முடிந்த அடுத்த நாள், விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளை அழைத்து தேர்தலில் பதிவான வாக்குகளை குறித்து விவாதம் நடத்தினார். அப்போது தமிழகத்தில் மண்டல வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள், அதில் எந்த இடத்தில் தமிழக வெற்றிகழகத்திற்கு சாதகம், பாதகம், சவால் போன்ற விவரங்களைக் கேட்டு அறிந்து உள்ளார். என் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இதையடுத்து விஜய் ரசிகர்கள் வெற்றி உறுதி, அதனால்தான் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் என்றதுடன் நிற்காமல் யார், யாருக்கு என்னென்ன பதவிகள் என்று பட்டியல் போட்டிருக்கிறார்கள்.

அதன்படி, விஜய் முதல்வராக இருப்பதுடன் உள்துறை, மகளிர் மேம்பாடு அவரிடமே இருக்குமாம். செங்கோட்டையனுக்கு பொதுப்பணித்துறை, கு.ப.கிருஷ்ணனுக்கு வருவாய் துறை, சத்யபாமாவுக்கு வேளாண்மைத் துறை ஆதவ் அர்ஜூனாவுக்கு செய்தி, விளம்பரம், அருண்ராஜ்க்கு சுகாதாரத் துறை என்று பல்வேறு கணக்கு போட்டிருக்கிறார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், த்ரிஷாவை துணை முதல்வர் பதவிக்கு நியமனம் செய்ய விஜய் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்களாம். ஆனால், விஜய்யோ, இப்போது அப்படி செய்தால் சரியாக இருக்காது. ஒரு தொகுதியை ரிசைன் செய்து, அங்கே த்ரிஷாவை போட்டியிட வைத்து, ஜெயித்த பிறகு கொடுப்போம் என்று சொல்லிவிட்டாராம்.

அதேபோன்று மெரினா பீச்சில் பதவி ஏற்புவிழா வைக்கலாமா அல்லது நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் வைப்பதா என்றும் ஆலோசனை செய்துவருகிறார்களாம்.

விசில்களின் உலகமே தனி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link