Share via:
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில்
கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவும் ஈராக்கும் போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை.
எனவே, பல்வேறு நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தி வருகின்றன.
இந்த நிலையில் 5 மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும்
டீசல் விலை 25 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்று கோடக் இன்ஸ்ட்யூசனல்
ஈகுட்டிஸ் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து இந்திய மக்களிடம் கடும் அச்சம் நிலவுகிறது.
இந்த நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் மத்திய பெட்ரோலிய
அமைச்சகம், ’கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத ஒரே நாடு இந்தியாதான்.
குறிப்பாக 5 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல்,
டீசல் விலை 25 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்ற தகவல் உண்மை அல்ல.
இத்தகைய விலை உயர்வுக்கான எந்தவொரு முன்மொழிவும் அரசின் பரிசீலனையில் இல்லை’ என்று
தெளிவுப்படுத்தியுள்ளது
இத்தகைய தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும்
நோக்கத்துடன் தீய உள்நோக்கம் கொண்டவை என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் முடியும் வரை இப்படித்தான் பேசுவார்கள், அதன்பிறகு இஷ்டத்துக்கு
ஏற்றிவிடுவார்கள் என்று மக்கள் தெளிவாகத்தான் சொல்கிறார்கள்.
