News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

2026 தமிழக தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பதற்கு முழுக்க முழுக்க விஜய்யே காரணம் என்று தவெகவினர் புல்லரிப்பாகி வருகிறார்கள்.

ஆனால், வழக்கமான அளவிலேயே வாக்குபதிவு நடந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது விஜய்யால் எதுவும் மாற்றம் நிகழவில்லை என்கிறது இந்த புள்ளிவிபரம்.

வாக்குபதிவு அதிகரிப்புக்கு முதல் காரணம், ஸார். அதாவது வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றம். 2021 தேர்தலின் போது தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் சுமார் 6.40 கோடி. ஆனால், 2026 தேர்தலுக்கு முன்னதாக இரட்டைப் பதிவுகள், இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் முகவரி மாறியவர்களின் பெயர்கள் என சுமார் 90 லட்சம் முதல் 1 கோடி வரையிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, தற்போதைய மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 5.50 கோடி மட்டுமே…

2021 தேர்தலில் 6.40 கோடி வாக்காளர்களில் 73% என்பது சுமார் 4.67 கோடி வாக்குகள். அதுவே 2026 தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 5.50 கோடியாகக் குறைந்துவிட்ட நிலையில், அதே 4.67 கோடி மக்கள் இப்போதும் வாக்களித்தால், வாக்குப்பதிவு சதவீதம் தானாகவே 85% ஆக உயர்ந்துவிடும். அதாவது, கடந்த முறை பதிவான அதே அளவு வாக்குகள் இந்த முறையும் பதிவானால் கூட, சதவீதக் கணக்கில் அது 12% அதிகரிப்பாக (73% லிருந்து 85%) காட்டும்.

அதனால் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 90 லட்சம் வாக்குகளைக் கருத்தில் கொள்ளாமல் சதவீதத்தை ஒப்பிடுவது தவறான முட்டாள்தனமான கணக்கீடு. புதிதாக 1 கோடி பேர் வாக்களிக்க வந்தார்கள் என்று சொல்வதை விட, ஏற்கனவே இருந்த பட்டியலில் ஒரு கோடி பெயர்கள் நீக்கப்பட்டதால் சதவீதம் எகிறியுள்ளது என்பதே உண்மை.

வாக்குப்பதிவு சதவீதம் 85%-ஐத் தாண்டினால் மட்டுமே, அதை புதிய வாக்காளர்களின் வருகையாகவோ அல்லது ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான அடையாளமாகவோ கருத முடியும்.

கடந்த முறையை விட அதிகமான எண்ணிக்கையிலான மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்திருந்தால் மட்டுமே அதை ஒரு எழுச்சியாகக் கருத முடியும். எனவே, புதிதாக வந்த விஜய் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை. அதனால்தான் விஜய் போட்டியிட்ட சென்னை, திருச்சியில் எந்த வகையிலும் பெரிய மாற்றம் நிகழவில்லை என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link