News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கோவை ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டது நாட்டின் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், பிரேமலதாவின் அரசியல் கூட்டணியை ஜக்கியே முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஈஷா சிவராத்திரி விழாவில் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அதோடு,  முப்படை ராணுவ அதிகாரிகளுக்கு பாரத் பூஷன் விருது வழங்கினார். இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

அதேநேரம், அதிமுகவின் வேலுமணி, பாஜகவின் முருகன் மற்றும் தேமுதிகவின் பிரேமலதா கலந்துகொண்டனர். இங்கு ஜக்கியின் ஏற்பாட்டின் படி பேச்சுவார்த்தை நடந்து முடிந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மாதம் மோடி வருகையில் பிரேமலதா மேடை ஏற இருக்கிறார்.

இந்த நிலையில் ஜக்கி போட்ட குத்து டான்ஸ் வைரலாகிவருகிறது. இது குறித்துப் பேசும் சமூக ஆர்வலர்கள், ‘’சிவனை வணங்க போறானுங்களா குத்து டான்ஸ் ஆட போறானுங்களா? தமிழ்நாடு முழுவதும் சிவாலயங்களில் இரவு முழுவதும் பெண்கள் பக்தியோடு அமர்ந்திருக்க இந்த ஜக்கி வாசுதேவ் மட்டும் நடிகைகளுடன் குத்தாட்டம் போடுவதை அரசு எப்படி அனுமதிக்கிறது..

இதுவரை ஜக்கி வாசுதேவ் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜக்கி வாசுதேவுக்கு ஆன்மீகத்தை பரப்புவது நோக்கம் அல்ல இவன் அரசியல் புரோக்கராக செயல்படுகிறான்,போதை கலாச்சாரத்தை வளர்க்கிறான். தமிழ்நாடு கலாச்சாரத்தையே சிதைக்கும் வேலையை செய்கிறான். பிரேமானந்தா, நித்யானந்தாவின் ஆன்மீக மோசடியை ஒழித்தது போல் ஜக்கி வாசுதேவின் ஆன்மீக மோசடியை, அரசியல் புரோக்கர் வேலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’’ என்கிறார்கள்.

அதெல்லாம் நடக்குற காரியமா என்ன..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link