News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அரைகுறை மருத்துவத்தை விட ஆபத்தான செயல் வேறு எதுவுமில்லை என்பார்கள். இதற்கு உதாரணமாக புற்றுநோய் செல்களை ஒழித்துக் கட்டுவதற்கு மருத்துவ வழிமுறை காட்டியிருக்கிறார் அண்ணாமலை.

இப்படியொரு கோமாளியை அரசியலில் இறக்கியிருக்கிறார்கள், இவர் எப்படி ஐபிஎஸ் பாஸ் செய்தார் என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் மருத்துவர்கள்.

புதுவையில் நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தினம் கடைபிடிக்கப்பட்டது. பாஜக இளைஞர் அணி சார்பில், இளைஞர் எழுச்சி மாநாடு, சுவாமி விவேகானந்தர் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்

அதில் பேசிய அண்ணாமலை, ‘’எல்லார் உடம்பிலும் கேன்சர் இருக்குதுங்கய்யா. இங்கே இருக்கின்ற எல்லார் உடம்பிலேயும் கேன்சர் செல் இல்லைன்னு இல்லை. அந்த செல்கள் அதிகமாகும் போது தான் கேன்சர் என்ற நோய் ஏற்படுகிறது. சின்ன சின்ன கேன்சர் செல் அங்கே அங்கே ஒளிந்து இருக்கும். நமக்கு தெரியாது.

ஸ்டேஜ் 1, ஸ்டேஜ் 2.. ஸ்டேஜ் 3, 4ன்னு அது பரவும் போது தான் கேன்சராக மாறுகிறது. இத்தனை நாள் நாம என்ன செய்தோம். செவ்வாய்க்கிழமையானால் ஒரு நாள் வாரந்தோறும் விரதம் இருப்பாங்க. ஒருநாள் சாப்பிட மாட்டாங்க.

அப்படி சாப்பிடாமல் இருந்தால் கேன்சர் செல் இருந்தால் செத்து போயிடும். சனிக்கிழமை சாப்பிடாதீங்க. கேன்சர் செல் செத்துப் போயிடும். ஒரு வருஷத்திற்கு நம் பாடி புல்லா கிளீன் பண்ணனுமா.. 7 நாள் விரதம் இருங்க மொத்த கேன்சர் செல்லும் செத்து போயிடும்.

நம் முன்னார்களுக்கு எல்லாம் கேன்சர் இருந்துச்சா.. அவங்க அப்போ விரதம் இருந்ததால் கேன்சர் வரவில்லை. ஆனால் இப்போ எல்லாரும் விரதம் இருப்பதை நிப்பாட்டியாச்சு.. யோகா, உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக சமய நல்லிணக்க மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்பு கன்னியாகுமரி பாறையில் 3 நாட்கள் தவமிருந்தார். அப்போது அவருக்கு பாரத அன்னை காட்சியளித்தார். அதில் அவர் எதிர்கால இந்தியாவின் விஸ்வரூபத்தை பார்த்தார். இளைஞர்கள் பெரிய ஆளாக வரவேண்டும் என்றால், நான் ஏன் பிறந்தேன் என்ற கேள்விக்கான விடையை கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். இந்த கேள்விக்கு விடை கிடைக்காத வரை மனது சமாதானம் ஆகவே ஆகாது. மனம் எதை கொடுத்தாலும் ஏற்று கொள்ளாது. இளைஞர்கள் விவேகானந்தரின் ‘லெட்டர் ஆப் சுவாமி விவேகானந்தர்’ என்ற புத்தகத்தை படிக்க வேண்டும்.
எனக்கு அந்த புத்தகத்தை படித்த பின்பு தான், நான் ஏன் பிறந்தேன் என்ற கேள்விக்கு விடை கிடைத்தது. இளைஞர்கள் யோகா செய்வதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். இதனால் உடல், மனம் ஆரோக்கியமாகும்” என்று கூறினார்.

புற்று நோய்க்கு பட்டினி இருப்பது மருந்து என்றால் எதுக்குய்யா இத்தனை ஆஸ்பத்திரிகள், எல்லாத்தையும் இழுத்து மூடுங்க என்று அண்ணாமலையை கிண்டல் செய்கிறார்கள்.

இவர் சொல்வதைக் கேட்டு எத்தனை பேர் கேன்சர்கூட விளையாடப் போறாங்கன்னு தெரியலையே…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link