News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

கேரள முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், தமிழக முதல்வர் விஜய் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

பிரதமரை சந்திக்காமல் முதன்முதலாக காங்கிரஸ் கட்சி பதவியேற்புக்குச் செல்வது எதிர்கால அரசியலுக்குச் சிக்கலாகலாம் என்று கூறப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் இந்த பயணத்தை புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.

அதேநேரம், தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவான விஜய்யின் த.வெ.க இப்போது கேரளாவிலும் தனது கட்சியைப் பரப்பும் வேலையில் இறங்கியுள்ளது. எனவே, பின்னர் ஒரு நாளில் கேரளம் சென்று முதல்வரை சந்திப்பதுடன் நில்லாமல் தவெக கட்சி குறித்தும் ஆலோசனை நடத்த இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

முதலில், அண்டை மாநிலமான கேரளாவில் புதிய காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்று, வி.டி. சதீசன் கேரள முதலமைச்சராகப் பதவியேற்கும் பிரம்மாண்ட விழாவில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பங்கேற்கவில்லை என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகின. அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தேசிய அளவிலான பதவியேற்பு விழாவிற்குத் தமிழக முதல்வருக்குப் பிரத்தியேக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணத்தைக் காட்டி விஜய் கேரளா செல்லவில்லை.
தமிழ்நாட்டின் தற்போதைய மிக முக்கிய உள்நாட்டு நிர்வாகக் கூட்டத்தொடர் பணிகள் மற்றும் கோட்டை சார்ந்த அவசரப் பணிகளைக் காரணம் காட்டி, நாளை கேரளா செல்லப் போவதில்லை என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி விழாக்களைத் தவிர்ப்பதன் மூலம், தேசியக் கட்சிகளுடனான முன்கூட்டிய கூட்டணிக் கட்டமைப்பைத் தவெக தற்போதைக்குத் தள்ளிப்போட விரும்புவதாகத் தெரிகிறது.

பாஜகவின் கோபத்திற்கு ஆளானால் மாநிலத்துக்கு நிதி கிடைப்பது சிக்கலாகும் என்பதால் பிரதமர் சந்திப்புக்குப் பிறகு கேரள பயணம் இருக்கும் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link