Share via:
கோமாதா, கோமியம் என்றாலே திராவிடக் கட்சிகளுக்கு ஆகாது. மாட்டைத்
தொழுவதையும் பூஜை செய்வதையும் மூட நம்பிக்கை என்று கிண்டலோ கிண்டல் செய்வார்கள்.
அதேநேரம், துர்கா ஸ்டாலினும் சேகர் பாபுவும் கோயில் கோயிலாக சுற்றித்
திரிகிறார்கள். கார்த்திகை தீபம் விளக்கு ஏற்றுவதை தடுத்த காரணத்தால் ஸ்டாலினுக்கு
தோஷம் வந்துவிட்டதாம். இதைத் தடுப்பதற்காக ஒட்டகத்துக்குப் பூஜை செய்திருக்கிறார் துர்கா
ஸ்டாலின்.
இதற்காக ஒட்டகம் ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதி சமாதியில் பொங்கல், வடை வைத்து வழிபடும் உடன்பிறப்புகள் இதற்கும் ஏதேனும்
விஞ்ஞான விளக்கம் கொடுக்க முன்வருவார்கள் என்பது உறுதி.
அந்த ஒட்டகத்தை அடுத்து கறியாக்கிவிட்டார்களா என்பதுதான் தெரியவில்லை.
பாஜகவினர் மாட்டை கோமாதா என்று கும்பிடுவதை கிண்டலடிப்பது போன்று துர்கா ஸ்டாலினுக்கு
எப்படி முட்டுக் கொடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்.