ஆதவ் அர்ஜுனா இன்று விஜய் கட்சியில் இணைவது உறுதியாக செய்திகள் வெளியானது. ஆனால், திடீர் திருப்பமாக இந்த பட்டியலில் முதல் நபராக அ.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் வெளியேறிய நிர்மல் குமார் இணைந்துள்ளார். அடுத்து காளியம்மாளும் இணைவதாக சொல்லப்படுகிறது.

அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளராக உள்ள நிர்மல்குமாருக்கும் ராஜ் சத்யனுடன் சிக்கல் நீடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஐ.டி. விங்கில் இருந்த கோவை சத்யன் சமீபத்தில் ஐ.டி விங்கில் இருந்து சிறிது காலம் விலகியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ராஜ் சத்யனுடன் நடந்த மோதல் நீடித்த நிலையில் இன்று பனையூர் தவெக அலுவலகத்திற்கு நிர்மல்குமார் வருகை தந்து த.வெ.க. செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்தார்.

வேலுமணியின் ஆதரவாளரான நிர்மல்குமாருக்கு கட்சியில் சரியான மதிப்பு கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமி நிர்மல் குமாரை கட்டம் கட்டி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், இது அ.தி.மு.க.வுக்குப் பின்னடைவாகவே பார்க்கப்பட்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களோ, இதை முன்கூட்டியே எதிர்பார்த்தே அவரை ஒதுக்கி வைத்ததாகச் சொல்கிறார்கள்.

ஒருவழியாக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைகிறார் தமிழக பாஜகவில் IT பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமாருக்கு இங்கேயும் அதே பதவி கொடுக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த 2023ம் ஆண்டு பா.ஜ.க ஐடி பிரிவில் இருந்த நிர்மல் குமாருக்கும் அண்ணாமலைக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார் நிர்மல்குமார்.

இவர் வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்தில் ஆதவ் அர்ஜூனாவும் வந்து சேர்ந்தார். அவரையும் புஸ்ஸி ஆனந்த் வரவேற்று அழைத்துச் சென்றார். இந்நிலையில் இன்று காளியம்மாள் விஜய் கட்சியில் சேர்கிறார் என்பது விஜய் ரசிகர்களை ரொம்பவே குஷியாக்கியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link