Share via:
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், ‘யார் அந்த சார்?’ என்பதை
வெளியிடவில்லை என்றால் நானே வெளியிடுவேன், என்னிடம் எல்லா ரிகார்டும் இருக்கிறது, ஞானசேகரன்
ஒரு போலீஸ் அதிகாரியிடமும் பேசியிருக்கிறார் என்று செய்தியாளர்களிடம் பேசிய விவகாரம்
தீயாகப் பரவி வருகிறது.
இந்த விவகாரத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க.வினர்
‘ஒரு பெண்ணுக்கு நடந்த அநியாயத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தன்னையே சாட்டையால்
அடித்துக்கொண்ட அண்ணாமலை இப்போது தன்னிடம் யார் அந்த சாருக்கு ஆதாரம் இருக்கிறது என்று
சொல்கிறார். இவர் உண்மையில் ஐபிஎஸ் படித்தாரா அல்லது டூப் விடுகிறாரா என்பதே தெரியவில்லை.
ஒரு வழக்கு நீதிமன்றத்துல இருக்கும் பொழுது ஆதாரத்தை அங்கே உடனே சமர்பிக்க வேண்டும்
என்ற பொது அறிவு கூட இல்லையே’’ என்று எகிறுகிறார்கள்.
அதோடு ‘’ஞானசேகரன் கால் ரெக்கார்ட் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை
சொல்வதை சாதாரணமாக கடந்து விட முடியாது. ஒரு அரசியல் கட்சி தலைவர் கையில் எப்படி
CDR போகும்? அந்த செல் நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டதா? அல்லது காவல்துறையிடம்
இருந்து கொடுக்கப்பட்டதா? செல் நிறுவனத்தில் இருந்து எப்படி ஒரு தனிநபரின் கால் விவரங்கள்,
ஒரு கட்சி தலைவருக்கு அளிக்கப்படும்? காவல்துறை தரப்பில் இருந்து வந்திருந்தால், ஸ்டாலின்
மாடல் காவல்துறை யாருக்கு வேலை செய்கிறது? மக்களுக்காக? அரசுக்கா? அண்ணாமலைக்கா? என்ற
கேள்வி மக்களுக்கு எழாதா? உண்மையிலேயே CDR இருக்கிறது என்றால், அதை உயர்நீதிமன்றத்தில்
ஒப்படைப்பது தானே முறை? ‘பொதுவெளியில் விடப்போகிறேன்- தேதி பின்னர் அறிவிக்கப்படும்’
என்று இவர் சொல்வது யாருக்கான மிரட்டல்? இவரை உடனடியாக போலீஸ் விசாரணைக்குக் கொண்டுவர
வேண்டும்’’ என்கிறார்கள்.
இதற்கு பா.ஜ.க.வினர், ‘’மத்திய டெலிகாம் மந்திரியை கையில் வைத்துக்கொண்டு
மொபைல் சர்வீஸ் கம்பெனிகளை கண்ட்ரோல் பண்ணுவதால் அந்த கால் ரிகார்டு வாங்குவது ஒன்றும்
பெரிய விஷயமில்லை. தி.மு.க. பொய் சொன்னால் வெளியிடுவார்’’ என்கிறார்கள்.
இதற்கு தி.மு.க.வினர், ‘’அப்படியே வானதி சீனுவாசன், குஷ்பு, தமிழிசை,
நைனார், ஹெச்.ராஜா போன்ற பா.ஜ.க.வினர் கடந்த ஓராண்டில் எங்கே, எப்போது, யார் யாரிடமெல்லாம்
பேசினார்கள் என்பதும் அண்ணாமலையிடம் இருக்கும். அதையும் வெளியிடச் சொல்லுங்க’’ என்கிறார்கள்.