Share via:
பள்ளிக் கல்வித்துறையில் எக்கச்சக்க புகார்கள் பெருகிவருகின்றன.
நூலகங்களும் இந்த துறையின் கீழ் வருகிறது. எனவே, இந்த துறையை புத்தம் புதிதாக மாற்றியமைக்கும்
வகையில் அதிரடி மாற்றம் நடந்துள்ளது. அதன்படி ஒரே நேரத்தில் 6 இயக்குனர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்
அதன்படி தொடக்கக் கல்வி இயக்கக இயக்குனராக இருந்த நரேஷ் இப்போது பள்ளிக் கல்வி இயக்கக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
அரசு தேர்வுகள் இயக்கக இயக்குனராக இருந்த சசிகலா,
தொடக்கக் கல்வி இயக்கக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் பழனிசாமி இப்போது தனியார் பள்ளிகள் இயக்கக இயக்குனராகியீருக்கிறார்.
ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன், கூடுதல் திட்ட இயக்குனர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (சமக்ரா சிக்ஷா)வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளிகள் இயக்கக இயக்குனராக இருந்த சுகன்யா,
ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சமக்ரா சிக்ஷா கூடுதல் திட்ட இயக்குனராக இருந்த உமா,
அரசு தேர்வுகள் இயக்கக இயக்குனராகியுள்ளார்.
இவர்களில் சென்னை பதவி உயர்வு யாருக்கு? ஸ்ரீதேவி, இணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இணை இய்க்குனராக இருந்த ஸ்ரீதேவிக்கு வகுப்பு I-ஐச் சார்ந்த இயக்குனர் பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் பள்ளிக்கல்வியின் 6 முக்கிய அதிகாரிகளை மாற்றியமைத்திருப்பது
மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

