News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அமைச்சர் கீர்த்தனா உடையைக் கிண்டல் செய்து, ஆபாச வார்த்தைகளை பேசியும் திமுகவினர் சோஷ்சியல் மீடியாவில் வைரலாக்கிவருகிறார்கள். உதயநிதியை வைத்துக்கொண்டே திமுக எம்.எல்.ஏ. இந்த விவகாரத்தைப் பேசியதும் வைரலாகியது.

இந்த நிலையில் கீர்த்தனாவுக்கு ஆதரவாக கனிமொழி இன்று ஒரு பதிவு போட்டுள்ளார். இது நேரடியாக உதயநிதிக்கு எதிரான அறைகூவல் என்கிறார்கள். அந்த பதிவில் கனிமொழி, ‘’காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது. பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும்..’’ என்று பேசியிருக்கிறார்.

இதற்கு தவெகவினர், ‘’மேடம் நீங்கள் யாரை கண்டிக்கிறீர்கள்? அவதூறாக பேசிய எம்எல்ஏ அவர்களையா? அல்லது அதை வேடிக்கை பார்த்து ரசித்த உங்கள் அண்ணன் மகனையா? அல்லது அதை கண்டிக்காத கட்சியினரையா? இப்படி எல்லாம் கட்சி நடத்தும் தலைவரையா? நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்? அதை தெளிவுபடுத்துங்கள்’’ என்று கேட்கிறார்கள்.

கனிமொழிக்கு ரோஷம் வருமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link