Share via:
விஜய்க்கு ஆதரவு கொடுத்த எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்க வேண்டும்
என்று எடப்பாடி பழனிசாமியும் எதிர்த்து வாக்களித்த எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்க
வேண்டும் என்று வேலுமணி டீமும் கொடுத்த தீர்மானங்களை இருண்டு குரூப்பும் திரும்பப்
பெற்றுள்ளன. இதன் மீதான முடிவு இன்று அல்லது நாளை சபாநாயகர் அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்.
சபாநாயகருக்கு அளப்பரிய சக்தி இருக்கிறது என்பதால் அவர் என்ன முடிவு
வேண்டுமானாலும் எடுக்கலாம். அதாவது, எடப்பாடி ஆதரவாளர்களான அதிமுக எம்.எல்.ஏ.க்கள்
21 பேரையும் பதவி நீக்கம் செய்யலாம். அப்படி செய்தால் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை
209 ஆக குறையும். மெஜாரிட்டிக்கு 105 போதும். தவெக நிம்மதியாக இருக்கலாம். இடைத்தேர்தலில்
15 சீட் வென்றால் அஞ்சு வருஷத்துக்கு கவலை இல்லை.
யாரையும் தகுதி நீக்கம் செய்யாமல் விடலாம் – அப்படி செய்தால் அவர்கள்
எடப்பாடி தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் என உறுதி ஆகும். அவர்கள் மாற்றி வாக்களித்தது
செல்லாது என்றாகும். மறு வாக்கெடுப்பு கோரிக்கை இப்போது எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை.
ஒருவேளை அப்படி நடந்தால் மீண்டும் திமுக வெளிநடப்பு செய்யுமா என
தெரியாது. எதிர்த்து வாக்களித்தால் தவெக அரசு கவிழும். எனவே நாளை சபாநாயகர் அதிமுக
உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என்று தவெகவினர் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
ஆனால், இன்னும் 6 மாதங்களுக்குப் பிரச்னை இல்லை என்பதால் இந்த
தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்றே அறிவிப்பார் என்கிறார்கள். எல்லாம்
லீமா ரோஸ் கைகளில் இருக்கிறது.
