News

வன்னியரசு, ஷாஜகான் பதவியேற்பு. விஜய்க்கு புதிய கூட்டணி ரெடி.

Follow Us

முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, முதன்முதலாக டெல்லி செல்கிறார். இரண்டு நாள் பயணத்தில் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க இருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்டாலின் ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு நிதிகளையும் பெற்றுவருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானத்தில் டெல்லிக்குச் சென்றார் விஜய். தமிழக முதலமைச்சர் விஜய்யை வரவேற்க டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக, எந்த மாநில முதலமைச்சர் டெல்லி சென்றாலும், தமிழ்நாடு இல்லத்தில் அரசு மரியாதை வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்களை அவர் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

முக்கியமாக,  இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் நிதி ஒதுக்கீடு, மாநில உரிமைகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு நடுநிலையாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், காவிரி விவகாரம், மும்மொழி கொள்ளை,தொகுதி மறுவரையறை, மதுரை மெட்ரோ போக்குவரத்து உள்ளிட்டவை தமிழகத்தில் இன்னும் தீர்வு காணப்படதாக பிரச்சனைகளாக உள்ளது.

அதே நேரத்தில் அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமான போக்கு இருந்து வந்தது. இதனால், தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்குவதில் பாராபட்சம் காட்டியதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு உருவான புதிய அரசியல் சூழலில் இந்த சந்திப்பு முக்கிய திருப்பமாக இருக்கும், பணம் பெற்றுவருவார் என்றே கணிக்கப்படுகிறது.
டெல்லி பயணத்தின் ஒரு பகுதியாக, ஜே.என்.யூ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோரை அவர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த கால அரசியல் தொடர்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் அவர் சந்திக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

டெல்லியிலாவது விஜய் பேட்டி கொடுப்பாரா என்று பார்க்கலாம். முதலமைச்சர் விஜய் இன்று பிரதமரை சந்திக்கும் நிலையில், முந்தைய தமிழக முதலமைச்சர்கள் எத்தனை நாட்களுக்குள் பிரதமரை சந்தித்தார்கள் என்ற தகவல் உலா வருகிறது. எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற 11 நாட்களில் சந்தித்தார். விஜய் பதவியேற்ற 17வது நாளில் சந்திக்கிறார். ஸ்டாலின் 41 நாட்கள் கழித்தே சந்தித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link