News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கேட்டு 15 நாட்களுக்கும் மேல் போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ஆனந்த், நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை அரசியலாக்க நினைத்தவர்களுக்கு சவுக்கடி தரும் வகையில், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு தூய்மைப் பணியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், ‘’”எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் தாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு தேவையானதை செய்து தருவோம் கடந்த ஆட்சிகளில் போராட்டம் பண்ண விடமாட்டார்கள், நம்ம முதலமைச்சர் ஏழை எளிய மக்களின் முதலமைச்சர் கண்டிப்பாக உங்களுக்கு தேவையானதை செய்வார்,

கடந்த ஆட்சி காலத்தில் இருந்தவர்கள் கஜானாவை காலி செய்து போய் விட்டார்கள். நீங்கள் கஷ்டப்படுவதை பார்த்து முதலமைச்சர் விஜய் வருத்தப்பட்டார், நீங்கள் கவலைப்பட வேண்டாம், இது உங்கள் ஆட்சி. எப்போது வேண்டுமானாலும் எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள் எங்கள் அலுவலக கதவுகள் உங்களுக்காக திறக்கப்பட்டு இருக்கும் இன்றைக்கு சென்னை தூய்மையாக இருக்கிறது என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம்.

அரசாங்கத்திற்கு 50,000 ரூபாய்க்கு செலவுகள் உள்ளன, ஆனால் கையில் 10,000 ரூபாய் மட்டுமே உள்ளது. மீதமுள்ள அந்த 40,000 ரூபாய் கடனாகப் பெறப்படுகிறது. இந்தக் கடனுக்கு யார் பொறுப்பு? வெறும் 100 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருக்கும் நமது விடியல் அரசாங்கம்தான் இதற்குக் காரணமா?

கடந்த 50 ஆண்டுகளாக யார் ஆட்சியில் இருந்தார்கள்? எந்தக் குழு 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது? முந்தைய ஆட்சியில் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் ஊழல் செய்வதற்காகப் பணம் கடன் வாங்கினார்கள். ஆனால் இந்த அரசாங்கத்தில், நமது முதலமைச்சர் பொது நலத் திட்டங்களுக்கு நேரடியாகச் செலவு செய்வதற்காகப் பணம் கடன் வாங்குகிறார். நிச்சயம் நல்லது நடக்கும்’’ என்று நம்பிக்கை கொடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link