News

கன்னடர் மூலம் காவிரிக்கு விஜய் ராஜதந்திரம்.? வெங்கட் நியமன பஞ்சாயத்து

Follow Us

ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் கே. வெங்கட் நாராயணாவை டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பது, அத்தனை கட்சியினரையும் அதிர வைத்துள்ளது.

பொதுவாக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்ட வல்லுநர்களே நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், இப்போது ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த வெங்கட் எப்படி காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலன்களை காப்பார் என்று கேள்வி எழுப்புகிறார்கள். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியே மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான இணைப்பு பாலமாக செயல்பட வேண்டும். மாநில அரசின் திட்டங்கள் என்ன நிலையில் இருக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டும். தமிழகத்தை பாதிக்கும் செயல்பாடுகள் இருந்தால் அதனை மாநில அரசுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.

சிறப்பு பிரதிநிதிக்கு தொகுப்பு ஊதியமாக மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். டெல்லியில் அனைத்து வசதிகளுடன் கூடிய சொகுசு பங்களா, தனி உதவியாளர்கள் என பல சலுகைகள் உண்டு. சென்னை தலைமைச் செயலகத்தில் தனி அறையோடு அமைச்சரவைக்கு இணையான சலுகைகள் வழங்கப்படும். தமிழகத்திலும், டெல்லியிலும் பயன்படுத்துவதற்காக தனி அரசு கார்கள் வழங்கப்படும்.

கம்பம் செல்வேந்திரன், திருவாரூர் அசோகன், பள்ளிப்பட்டு நரசிம்மன், ஜக்கையன், தளவாய் சுந்தரம், ஏ.கே.எஸ் விஜயன் போன்றவர்கள் இருந்த பட்டியலில் வெங்கட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர்  படத்தை தயாரித்தவர் என்பதுதான் இதற்கான தகுதியா? முதலமைச்சருடனான தனிப்பட்ட தொழில் தொடர்பை தமிழ்நாட்டுனான தொடர்பாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

வெங்கடராமன் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதி என்ற அறிவிப்பு ஏன் இரண்டு நாட்கள் கடந்து வெளியில் வருகிறது? எதுவும் பெரிய சம்பவம் நடந்தால் அதிலிருந்து தப்பிக்க ஆணையை வெளியிடாமல் மறைத்தார்களா என்று கேட்கிறார்கள்.

அதேநேரம் விஜய் சார்பாகப் பேசுபவர்கள், கர்நாடகப் பிரச்னை, காவிரி பஞ்சாயத்துகளை கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர் பேசினால் அணை கட்டுவதைத் நிறுத்திவிடுவார்கள். இது விஜய்யின் ராஜதந்திரம் என்கிறார்கள். சபாஷ்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link