News

கன்னடர் மூலம் காவிரிக்கு விஜய் ராஜதந்திரம்.? வெங்கட் நியமன பஞ்சாயத்து

Follow Us

போதைப்பொருள் ஒழிப்பிற்கு முதல்வர் விஜய் ஓடிக்கொண்டிருக்கும் போது, அவரது அமைச்சர் சரத்குமார் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பயன்படுத்திய வீடியோ சர்ச்சையாக மாறியிருக்கிறது.

தன் குழந்தைக்கு மாத்திரையை உடைத்து பவுடர் செய்து கொடுத்தேன் என்று அமைச்சர் சொல்கிற அதே நேரத்தில் அந்த வீடியோவுக்கு தலைப்பாக ‘Thug Life’ என்று அப்போது குறிப்பிட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது

உடல் சரியில்லாத குழந்தையை அங்கு எப்படி அழைத்துச்செல்லலாம் என்ற கேள்விகள் ஒருபுறம் எழும் நேரத்தில், அந்த வீடியோவில் குழந்தையே இல்லை என்பது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. எதற்காக அந்த வீடியோவை உங்கள் நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில் ‘close friends’ மோடில் வைக்க வேண்டும்? ஒரு அமைச்சராக இருந்துகொண்டு, இப்படி கேவலமாகப் பொய் சொல்வதற்கு அசிங்கமாக இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த விவகாரம் வில்லங்கமாவதால் அமைச்சரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று ஒரு பேச்சு எழுகிறது. அதேநேரம், பதவி நீக்கம் செய்தால் போதை மருந்து பயன்படுத்தியது உறுதியாகி ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பதால் விஜய் அமைதி காக்கிறார். இந்த வீடியோவை சரிக்கட்டும் வகையில் தாய் மாமன் சீரில் இனி ஏடிஎம் கார்டு, 500 ரூபாய், மற்றும் மாத்திரையும் சேர்த்துக் கொடுப்பதற்குத் திட்டமிடலாமா என்றும் யோசிக்கிறார்களாம்.

உடனடியாக அமைச்சரை தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அவர் பயன்படுத்தியது போதைப் பொருளா இல்லையா என்பதை கண்டுபிடிக்க வேண்டியது தமிழக காவல்துறையின் கடமை. தவறிருப்பின் அமைச்சரவையிலிருந்து உறுதியாக நீக்கப்பட வேண்டும் என்பதையே பொதுமக்கள் விரும்புவார்கள்.

விஜய் என்ன செய்யப்போகிறார்..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link