News

விஜய்க்கு உதயநிதி, எடப்பாடி ஆதரவு. மேகதாதுக்கு 5வது தீர்மானம்

Follow Us

விரைவில் நடக்கயிருக்கும் 6 தொகுதி இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த களத்தில் விஜய்யை வெல்ல முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவின் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யாபாமா மற்றும் விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.

இந்த 5 தொகுதிகள் உட்பட முதல்வர் விஜய் போட்டியிட்டு வென்ற பின் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியிலும் விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், இந்த தேர்தலில்  அந்தக் கட்சி கட்டாயம் வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதேநேரம் திருச்சி தவிர்த்து அத்தனை தொகுதியும் அதிமுக வென்ற தொகுதி என்பதால் இங்கு மீண்டும் வென்று காட்டவேண்டிய அவசியம் எடப்பாடிக்கு வந்துள்ளது.

விஜய் கட்சியினர் இப்போதே இங்கு வேகம் எடுத்துள்ளனர். அதன்படி, அந்தந்த மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் இருந்து அதிமுகவினரை சாரை சாரையாக தவெகவில் இணைக்கும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

இப்போது அதிமுகவில் எக்கச்சக்க அதிருப்தி நிலவுகிறது. மிதுன் அரசியலுக்கு வரப்போவதாக எழுந்த புரளியை இப்போதுதான் எடப்பாடி அடக்கியுள்ளனர். இப்போது சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோரது அடுத்தகட்ட நடவடிக்கை இன்னமும் தெரியவில்லை.

இப்படி கட்சிக்குள் ஏராளமான பிரச்சனைகள் இருப்பதால், இப்போதே களத்தில் இறங்கி சுற்றுப்பயணம் செய்வதற்கு எடப்பாடி தயாராகி வருகிறார்.  திமுகவினர் களத்தில் டம்மி வேட்பாளர்கள் போட்டால் விஜய் கட்சியை வெல்ல முடியும் என்று பேச்சுவார்த்தை ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆறில் மூன்று தொகுதியில் வென்று விட்டாலே அதிமுக தன் பக்கம் இருப்பதை உறுதி செய்துவிடலாம் என்று நினைக்கிறார்.

என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link