News

விஜய்க்கு உதயநிதி, எடப்பாடி ஆதரவு. மேகதாதுக்கு 5வது தீர்மானம்

Follow Us

 

யார் தப்பு செஞ்சாலும் விட மாட்டோம் என்று சட்டமன்றத்தில் வீரவசனம் பேசிய முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ரெய்டு நடப்பதாக சொல்லப்படுகிறது.

இன்று திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் உள்ள முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் 35 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலை துறையில் எப்படிப்பட்ட விஞ்ஞான ஊழலை எ.வ.வேலு செய்திருக்கிறார் என்று சவுக்கு சங்கர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‘’தமிழக நெடுஞ்சாலை துறையின் கீழ் வரும் சாலைகள் மூன்று வகையாக பிரிக்கப்படும். ஒரு சாலை புதிதாக போடப்பட்டால் அந்த ஒப்பந்ததாரர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த சாலையின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.. எளிமையாக சொன்னால் ஒரு பொருள் வாங்கினால் கொடுக்கப்படும் கியாரண்டி போல.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் புதிய சாலைகளே. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம், தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவில் நெடுஞ்சாலை துறையின் பிரிவின் தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் 600 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விட்டார்.

தமிழகத்தின் சாலைகளில் மொத்தமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள எந்த தேவையும் இல்லை. லஞ்சம் வாங்குவதற்காக மட்டும் ஜனவரி 2026 ல் இந்த டெண்டர் விடப்பட்டு 600 கோடியில் 35 சதவிகிதத்தை கமிஷனாக பெற்றார் எ.வ. வேலு. ஒப்பந்ததாரர்களுக்கும் இது வசதி. வேலையே செய்யாமல் எளிதாக வரும் இந்த பணத்துக்காக ஒப்புக்கொண்டு 35 சதவிகித லஞ்சத்தை ஜனவரி மாதம் கொடுத்து விட்டனர்.

நெடுஞ்சாலை பொறியாளர் சத்யபிரகாஷ்  பிரிவுக்கு நியமிக்கப்பட வேலுவுக்கு கொடுத்த லஞ்சம் எவ்வளவு தெரியுமா ? 40 கோடி. (ஒரு வருடத்துக்கு. ஒரு வருடம் முடிந்ததும் Top Up செய்ய வேண்டும்). இப்பதவிக்கு வந்ததும், சத்யபிரகாஷ் நெடுஞ்சாலை துறையில் இருந்த 43 மண்டலங்களிலும் தலா 25 லட்ச ரூபாய் வசூல் செய்து முடித்தார். இது போக, தனக்கு வசூல் செய்து தருவதற்கென்றே, ஒரு தலைமை பொறியாளரை பதவி அளித்து நெடுஞ்சாலை துறையில் வைத்திருந்தார் வேலு. சந்திரசேகர் என்ற தலைமை பொறியாளர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார்’’ என்று எடுத்துக் கொடுத்துள்ளார்.

அறப்போர் இயக்கமும் எக்கச்சக்க ஆதாரம் கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் ரெய்டு சிக்கல் தருமா அல்லது கண் துடைப்பா என்பது விரைவில் தெரிந்துவிடும். விஜய் களத்தில் இறங்கிவிட்டார், இனி வேட்டையாடாமல் விட மாட்டார் என்று அவரது ரசிகர்கள் வெடி போட்டு கொண்டாடுகிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link